பாராளுமன்றம் மக்களவையில் முத்தலாக் மசோதா மீதானவிவாதம் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான எதிர்க் கட்சி உறுப்பினர்கள் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்துபேசி வருகின்றனர்.

இதற்கு பதில் அளித்து சட்டமந்திரி ரவி சங்கர் பிரசாத் பேசுகையில் ‘‘உச்சநீதிமன்றம் தீர்ப்புக்குப்பின் நேற்றுவரை 345 வழக்குகள் பதிவாகியுள்ளன. முத்தலாக் மூலமாக பாதிக்கப்பட்ட பெண்களை நாம் நடு ரோட்டில் விட்டு விட வேண்டுமா?. நான் நரேந்திர மோடி அரசின் மந்திரி. ராஜீவ்காந்தி அரசின் மந்திரியல்ல.

கும்பலால் அடித்துக் கொலை செய்யப்படுவதற்கு எதிராக சட்டம் கொண்டுவர வேண்டும் என்று தற்போது வலியுறுத்தி வருகின்றனர். சதி மற்றும் கொலைக்கு எதிரான தண்டனைப்பிரிவு இல்லையா? கும்பலால் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு கோர்ட் தண்டனை வழங்கவில்லையா? இதுதொடர்பான வழக்கில் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது’’ என்றார்.

Comments are closed.