நான் இந்தியாவின் பிரதமர் கிடையாது. இந்தியமக்களின் பிரதான சேவகன்" என தான் சொன்ன வார்த்தை மெய்யாக்கி காட்டியிருக்கார் பிரதமர் நரேந்திர மோடி. அரசுமுறை சுற்றுப்பயணத்தில் இருந்த காரணத்தால், தனது சொந்த தம்பிமகளின் இறுதிசடங்கில் கூட அவர் கலந்துகொள்ள மறுத்த செய்தி தற்போது வெளியாகி உள்ளது.

நநேரந்திர மோடியின் இளையசகோதர் பிரகலாத் மோடி. அவரின் மகள் நிகுஞ்பென். நீண்ட நாட்களாக இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிகுஞ்பென் கடந்தவாரம் இறந்துவிட்டார்.

அவருடைய உடல்நிலை மிகவும் கவலைகிடமாக இருக்கும் போது பிரதமர் மோடிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அச்சமயம், பிரதமர் மோடி சீனாவில் நடந்த ஜி-20 நாடுகள் பங்கேற்ற மாநாட்டில் இருந்தார்.

தனது பயணத்தை முடித்து இந்தியாதிரும்பிய மோடி உடனடியாக தனது சகோதரர் பிரகலாத்தை அலைபேசியில் தொடர்புகொண்டு மகள் நிகுஞ்பென்னின் உடல்நலம் குறித்து விசாரித்தார். அப்போதுதான் நிகுஞ்பென் இறந்த சம்பவம் அவருக்கு தெரிந்தது.

 

பிரதமரின் பயணத்திட்டத்தின் காரணமாக தனது சகோதரரின் மகள் இறுதிசடங்கில்கூட அவரால் பங்கேற்க முடியவில்லை. இந்த சம்பவம் அரசு தரப்பு அதிகாரிகளுக்கும் ஊடகங்களுக்கும்கூட தெரியாமல் போனது.

நிகுஞ்பென்னின் குடும்பம் பொருளாதார ரீதியல் பலம்வாய்ந்தது கிடையாது. நிகுஞ்சின் கணவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்க்கிறார். இருவரும் சிறிய வாடகை வீட்டில் வசித்துவந்தனர். நிகுஞ் தனது கணவருக்கு உதவியாகவும் குடும்ப வருமானத் திற்காகவும் தையல் வேலை செய்தும் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு டியூசன் எடுத்தும்வந்தார்.

பிரதமரின் தம்பி மகளாக இருந்தாலும் அதை நிகுஞ் ஒருபோதும் தவறாக பயன் படுத்தியது கிடையாது. அவர் வசிக்கும் பகுதியில் உள்ள அரசு அதிகாரிகள் பலருக்கும் நிகுஞ்பென் நரேந்திர மோடியின் தம்பிமகள் என்பது தெரியாதாம்.

அரசியல், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பலதலைமுறைக்கும் சொத்து சேர்க்கும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் பிரதமர் மோடி பொறுப்புடன் கடமையாற்றுவது ஆச்சரியம் அளிக்கிறது.

பொதுமக்களிடம் உரைநிகழ்த்திய பிரதமர் மோடி " நான் இந்தியாவின் பிரதமர் கிடையாது. இந்தியமக்களின் பிரதான சேவகன்" என கூறினார். அதை இன்று மெய்யாக்கி காட்டியி ருக்கிறார்.

 

படத்தில் வட்டமிடப்பட்டவர் தான் நிகுஞ்பென்.

Leave a Reply