டில்லியில் பிரதமர் அலுவலகத்திற்கு மனு கொடுக்கசென்ற விவசாயிகள் முதலில் நிர்வாணமாக்கி கொண்டு போராட்டம் நடத்தியவர் தமிழர் இல்லை. விவசாயி இல்லை. அவர் கர்நாடகாவை சேர்ந்தவர் என என்னிடம் தகவல்தெரிவித்தனர்.

இதன்பின்னர் தான் 3 விவசாயிகள் நிர்வாணமாக போராட்டம் நடத்தினர். இதன்பின்னணி என்ன? இதனை அய்யாகண்ணு தடுக்கவில்லை. இந்த தகவலை, விவசாயிகளுக்கு ஆதரவுஅளிக்கும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்னிடம் கூறினர்.

அவர்கள், பெண்களை நிர்வாணப்படுத்தி போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ள தாகவும், ஆனால் நாங்கள் எதிர்த்ததால் அத்திட்டம் கைவிடப் பட்டது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

கழுத்தறுப்பு போராட்டம் நடத்த திட்டமிடப் பட்டுள்ளதாகவும், இரவில் தூங்கும் போது, ஒரு விவசாயி தன்னை தானே கழுத்தறுத்துகொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இது ஜீரணிக்கமுடியாதது. இதனை அய்யாகண்ணுவிடம் கூறியபோது அவர் மறுத்தார். இந்தமாதிரி போராட்டங்களை எப்படி ஏற்றுகொள்ள முடியும்? இவ்வாறு அவர் கூறினர்.

தவறு நம் மீதுதான்…

தவறான நோக்கத்துடன், திட்டமிட்டு மத்திய அரசை மட்டுமே வேண்டுமென்றே எதிர்த்து போராடுகிறார்கள் என்பது பொதுமக்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் முன்பே தெரிந்து இருந்தும் நாம் ஏன் இவர்களை மத்திய மந்திரிகளை சந்திக்கவைத்தோம்..இரண்டு மூன்று நாளிலேயே விரட்டிவிட்டு இருந்தால் பிரச்சனையே இல்லை….நாம் ஆரம்பத்தில் எடுக்காத கடுமையான நடவடிக்கை தான் இன்று அவர்களை முரண்டு பிடிக்க வைக்கிறது .

Tags:

Leave a Reply