தாய்லாந்து தலைநகர் பாங்காங் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி. ஆசியான் மாநாடு, கிழக் காசிய மாநாடு மற்றும் கூட்டு பொருளாதார மாநாடு ஆகியவற்றில் பங்கேற்கிறார்.

இதன் ஒருஅம்சமாக பாங்காக்கில் இந்திய நேரப்படி இன்று மாலை சுமார் 6.15 மணிக்கு துவங்கிய, ‘SawasdeePMModi’ என்ற இந்திய வம்சாவளியினருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றாார்.

நிகழ்ச்சியின் துவக்கத்தில், குருநானக்கின் 550வது பிறந்தநாளையொட்டி, நினைவு நாணயம் ஒன்றையும், திருக்குறளின் ‘தாய்’ மொழி பெயர்ப்பையும் மோடி வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் உரையை ஆரம்பித்தபோது, நமது நாட்டின், தமிழ் உள்ளிட்ட, பல்வேறு மொழிகளிலும் மோடி வணக்கம் என்பதை தெரிவித்தார். மேலும், தனது உரையின்போது, திருக்குறள் என்பது வாழ்க்கைக்கான வழிகாட்டியாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறுகையில், உங்கள் எல்லோருக்கும் ஒருவிஷயம் தெரிந்திருக்கும். தீவிரவாதம் மற்றும் பிரிவினை வாதத்திற்கான, விதை தூவப்படுவதற்கான மிகப்பெரிய காரணம் ஒன்றை, எங்களது அரசு சமீபத்தில் அகற்றியது. நாம் சரியான ஒருமுடிவை எடுக்கும் போது, உலகம்முழுக்க இருந்து அதற்கான ஆதரவுகுரல்கள் எதிரொலிக்கும். தாய்லாந்திலும் அந்த ஆதரவை நான் பார்க்க முடிகிறது, என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், உங்கள் எல்லோருக்கும் ஒருவிஷயம் தெரிந்திருக்கும். தீவிரவாதம் மற்றும் பிரிவினை வாதத்திற்கான, விதை தூவப்படு வதற்கான மிகப் பெரிய காரணம் ஒன்றை, எங்களது அரசு சமீபத்தில் அகற்றியது. நாம் சரியான ஒருமுடிவை எடுக்கும்போது, உலகம் முழுக்க இருந்து அதற்கான ஆதரவு குரல்கள் எதிரொலிக்கும். தாய்லாந்திலும் அந்த ஆதரவை நான்பார்க்க முடிகிறது, என்று தெரிவித்தார்.

ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி, ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதற்கான அதிரடிஉத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகள், யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டு, அது நடைமுறைக்கு வந்துவிட்டது. பிரதமர் மோடி இதுதொடர்பாக தான் மறைமுகமாக இவ்வாறு பேசினார்.

மோடி இவ்வாறு பேசியதும், ஒட்டுமொத்த இந்திய வம்சாவளியினரும் எழுந்து நின்று கைதட்டி தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இதைப் பார்த்து புன்முறுவல் பூத்த நரேந்திர மோடி, இது நரேந்திரமோடி என்ற தனி நபருக்கான வரவேற்பு, பாராட்டு கிடையாது. இந்திய நாடாளு மன்றத்துக்கும், அதன் ஒவ்வொரு எம்பிக்களுக்கும், சென்றுசேர வேண்டிய பாராட்டாக, இதை நான் பார்க்கிறேன். உங்கள் அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்தார்.

Comments are closed.