தமிழகத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வில்லை என்று குற்றம்சாட்டிவரும் முக. ஸ்டாலினுக்கு மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பதிலடிகொடுத்துள்ளார்.

பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியானதை தொடர்ந்து, 2014ம் ஆண்டு பாஜக கொடுத்த வாக்குறுதி களையே இன்னும் நிறைவேற்ற வில்லை என்று மு.க. ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் செய்தியாளர்களை சந்தித்த  பொன். ராதாகிருஷ்ணன், திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு தரைவழியாகத்தானே ஸ்டாலின் வந்தார்.

அப்போது சாலையின் இருபக்கங்களிலும் நடைபெறும் மேம்பாட்டுப் பணிகளை அவர் பார்க்க வில்லையா. நிச்சயம் அவர் தூங்கியிருக்க மாட்டார் என்று எனக்குத்தெரியும், ஒருவேளை திருவனந்த புரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு தரைவழியாக ஸ்டாலின் பயணித்தபோது தூங்கியிருந்தால் கூட உடன் வந்தவர்கள் அவரை தட்டி எழுப்பி, எந்தளவுக்கு சாலைப்பணிகள் நடைபெற்று வருகின்றன என்பதை காட்டியிருக்கலாம்.

அப்படி பார்த்திருந்தால் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற வளர்ச்சிப் பணிகளை கண் கூடாக கண்டிருக்க முடியும் என்றும் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Leave a Reply