இக்கூட்டத்தில் நிதி ஆயோக் அமைப்பின் துணைத்தலைவர் அர்விந்த் பனகாரியா மற்றும் அதன் உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்தகூட்டத்தில், அடுத்த 15 ஆண்டுகளில் நாட்டின் முன்னேற்றத்திற்காக அரசு முன்னெடுக்க உள்ள திட்டங்கள் இறுதிசெய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 

திட்டங்களை செயல்படுத்து வதற்கான நாட்டின் பொருளாதார நிலை குறித்தும், வறுமை ஒழிப்புக்காக அரசு ஏற்கனவே செயல் படுத்தி வரும் திட்டங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் இந்தகூட்டத்தில் நரேந்திர மோடி ஆய்வு மேற்கொள்ள உள்ளார். 

மேலும் வறுமை ஒழிப்புக்காக அமைக்கப் பட்ட குழு மற்றும் விவசாய மேம்பாட்டுக்கென அமைக்கப்பட்ட குழு என இருகுழுக்களும், தங்களின் திட்ட அறிக்கைகளை இக்கூட்டத்தில் சமர்ப்பிப்பார்கள் என கூறப்படுகிறது. நாட்டின் வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்கான அரசின் முக்கிய முயற்சியாக நிதி ஆயோக் அறிவிக்கப் பட்டிருப்பதால், இக்கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Leave a Reply