நிதி ஆயோக்கூட்டத்திற்கு முன்னதாக, சந்திரபாபுநாயுடு உள்ளிட்ட முதலமைச் சர்களை பிரதமர் மோடி சந்தித்தார்.

பாஜக தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியபின்னர், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபுநாயுடு, பிரதமர் மோடியை முதல் முறையாக சந்தித்தார். அதேபோல், பிரதமர் மோடியையும், பாஜக தலமையிலான மத்திய அரசையும் கடுமையாக எதிர்த்துவரும் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியையும் பிரதமர் மோடி சந்தித்தார்.

மத்திய அரசுக்கு எதிரான நிலைப் பாட்டைக் கொண்டுள்ள கேரள முதலமைச்சர் பினரயி விஜயன், கர்நாடகாவில் பாஜகவை ஆட்சியில் அமர விடாமல் தடுத்த அம்மாநிலத்தின் முதலமைச்சர் குமாரசாமி ஆகியோரையும் பிரதமர்  சந்தித்து அளவளாவினார்.

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்புஅந்தஸ்து கோரும் விவகாரத்தை நிதிஆயோக் கூட்டத்தில் எழுப்பிய சந்திரபாபுநாயுடு, அதற்கு ஆதரவு தருமாறு மம்தா பானர்ஜி, பினரயிவிஜயன், குமாரசாமி உள்ளிட்ட முதலமைச்சர்களிடம் முன்னதாக கோரிக்கை விடுத்திருந்தார்.

Leave a Reply