பீகார் சட்ட சபை தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி பெறப் போகும் இமாலய வெற்றியின் மூலம், தற்போதைய முதல்வர் நிதீஷ்குமார், என்னை இனி எப்போதும் மறக்க மாட்டார்.

ஜெயபிரகாஜ் நாராயணனின் மாணவரான நிதீஷ்குமார், ஜெயபிரகாஷ் நாராயணனின் நற்பெருமையை வர்த்தக ரீதியில் பயன்படுத்தி இழிவுபடுத்தி விட்டார். ஜெயபிரகாஷ் நாராயணனை அடியோடுவெறுக்கும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து நிதீஷ் குமார், தன்னையே இழிவுபடுத்திக் கொண்டுள்ளார்.

பாஜக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் (குஜராத், மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான்) ஆட்சி செய்துவருகிறது. அங்கு எல்லாம்,  இட ஒதுக்கீடு பற்றிய சர்ச்சையே வருவதில்லை. சட்டமேதை அம்பேத்கரால் வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீடு முறையை, எனது தலைமையிலான மததிய அரசு ஒரு போதும் திரும்ப பெறாது.

பீகார் மாநிலம் நாலந்தா பகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது

Leave a Reply