ஆர்எஸ்எஸ், பாஜக இல்லா இந்தியாவை உருவோக்குவோம் என்றுபேசிய பிகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கு பதிலடிகொடுக்கும் வகையில் ரவிசங்கர் பிரசாத் கண்டனம் தெரிவித்துள்ளார்.

"நாட்டுக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட இயக்கம் தான் ஆர்எஸ்எஸ். அந்த இயக்கத்தை குறைகூறும் நிதீஷ் குமார், நாட்டைத் துண்டாடுவதையும், பயங்கரவாதத்தை பரப்புவதையும் நோக்கமாக கொண்ட சிமி, ஐ.எஸ்., லஷ்கர்-ஏ-தொய்பா போன்ற அமைப்புகள்குறித்து ஒரு போதும் வாய் திறக்காதது ஏன்?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

நிதீஷ்குமாருக்கு துணிவிருந்தால், பிகார் மாநிலத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பை தடைசெய்யட்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுஷில்குமார் மோடி சவால் விடுத்துள்ளார்.

இதுகுறித்து பாட்னாவில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஆர்எஸ்எஸ் அமைப்பை முந்தைய காங்கிரஸ் அரசுகள் தடைசெய்தன. அதன்பிறகு முன்பை காட்டிலும் அதிகவலிமையுடன் ஆர்எஸ்எஸ் அமைப்பு வளர்ந்ததையும், அதன் விளைவு களையும் காங்கிரஸ் கட்சி கண்கூடாக கண்டது. நிதீஷ் குமாருக்கு துணிவு இருந்தால் ஆர்எஸ்எஸ் அமைப்பை பிகாரில் தடைசெய்யட்டும் என்றார் சுஷில்குமார் மோடி.

Leave a Reply