மத்­திய அரசு, அன்­னிய முத­லீ­டு­களை அதிக அளவில் ஈர்க்கும் நோக்கில், தொழில் துவக்­கு­வ­தற்­கான நடை­மு­றை­களை சுல­ப­மாக்கி வரு­கி­றது.


அவற்றில் ஒன்­றாக, கம்­பெனி கள் சட்­டத்தின் கீழ், நிறு­வ­னங்­களை பதிவு செய்­வ­தற்­கான வழி­மு­றையை, ஒரே குடையின் கீழ், மத்­திய அரசு கொண்டு வந்­து உள்­ளது. இதற்­காக, மத்­திய நிறு­வன விவ­கா­ரங்கள் அமைச்­சகம், சி.ஆர்.சி., எனப்­படும், மத்­திய பதிவு மையம் என்ற அமைப்பை உரு­வாக்­கி­யுள்­ளது. இந்த அமைப்பு, வலை­தளம் வாயி­லாக வரும் அனைத்து விண்­ணப்­பங்­க­ளையும் பரி­சீ­லித்து, நிறு­வ­னங்­களை பதிவு செய்து தரும் பணியை மேற்­கொள்ளும். தற்­போது, நிறு­வ­னங்­களை பதிவு செய்யும் பணியை, கம்­பெ­னிகள் பதி­வாளர் அலு­வ­லகம் மேற்­கொண்டு வரு­கி­றது; இன்று முதல், இப்­ப­ணியை, சி.ஆர்.சி., மேற்­கொள்ள உள்­ளது.


புதிய நிறு­வ­னங்­களை துவக்க விரும்­புவோர், கம்­பெ­னிகள் பதிவு சட்­டத்தின் கீழ், உரிய தொகை­யுடன், வலை­தளம் வாயி­லாக மின்­னணு விண்­ணப்­பங்­களை – ஐ.என்.சி., 2, 7, 29; ஐ.என்.சி., 22, டி.ஐ.ஆர்., 12, யு.ஆர்.சி., 1 படி­வங்களை பூர்த்தி செய்து அனுப்­பலாம். அந்த விண்­ணப்­பங்­களை, சி.ஆர்.சி., பரி­சீ­லித்து, தகு­தி­யுள்ள நிறு­வ­னங்­க­ளுக்கு பதிவுச் சான்றிதழ் வழங்கும். அதே­ ச­மயம், நிறு­வ­னங்­களை பதிவு செய்­வ­தற்­காக பெறப்­படும் விண்­ணப்­பங்கள், கம்­பெ­னிகள் சட்ட விதி­முறை­களின்­படி உள்­ளதா; அதே பெயரில் வேறு நிறு­வ­னங்கள் செயல்­ப­டு­கின்­ற­னவா என்­பது உள்­ளிட்ட ஆய்­வு­களை ஆர்.ஓ.சி., மேற்­கொள்ளும். இதை­ய­டுத்து, ஆர்.ஓ.சி., அளிக்கும் பரிந்­து­ரையின் அடிப்­ப­டை­யி­லேயே, சி.ஆர்.சி., புதிய நிறு­வ­னங்­களை பதிவு செய்யும்.


இன்று முதல் அம­லுக்கு வரும் இந்த நடை­மு­றையால், ஒரு நிறு­வனம், கம்­பெ­னிகள் சட்­டத்தின் கீழ், உரிய விதி­மு­றை­களை பின்­பற்றி வலை­த­ளத்தில் விண்­ணப்­பித்தால், 24 மணி நேரத்தில் அது தொடர்­பான பரி­சீ­லனை முடி­வ­டைந்து, மறுநாள் பதிவு சான்­றிதழ் பெற்று விடலாம். ‘இப்­ப­ணிகள் விரை­வாக நடை­பெ­று­கின்­ற­னவா என்­பது நேர­டி­யாக மேற்­பார்­வை­யி­டப்­படும்’ என, நிறு­வன விவ­கா­ரங்கள் அமைச்­சகம் தெரி­வித்­துள்­ளது.


சர்­வ­தேச நடை­முறைஉலக நாடு­களில் தொழில் துவங்­கு­வ­தற்­கான நடை­முறைகள் எளி­மை­யாக உள்ளன. அதை பின்­பற்றி, மத்திய அரசு, சுல­ப­மாக தொழில் துவங்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கி­றது. அதன்­படி, நாடு தழு­விய அளவில், ஒரே அமைப்பின் கீழ், மின்­னணு விண்­ணப்­பங்­களை பரி­சீ­லித்து, பதிவு செய்யும் நடை­மு­றை அம­லுக்கு வந்­துள்­ளது.

Leave a Reply