தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை தயாரிப்புகுழு தலைவர் கஸ்தூரி ரங்கன் தினசரி நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், கல்விகற்பதை மகிழ்ச்சியான அனுபவமாக மாற்றுவோம் எனக் கூறியுள்ளார்.

இந்த மொழியைதான் கற்க வேண்டும் என அழுத்தம் தருவது எங்கள் நோக்கமல்ல என்றும்,நிறையை மொழிகளை கற்றுக்கொள்வதன் மூலம் அது மூளைவளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

மேலும், தங்கள்குழு தயாரித்துள்ள தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை அமல்படுத்த, ஊடகங்கள் உதவவேண்டும், அறிவு ஜீவிகள் உதவவேண்டும், உள்ளூர் தலைவர்கள் உதவ வேண்டும் எனவும் கஸ்தூரி ரங்கன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மும்மொழிக் கொள்கையின் முக்கியத்துவத்தை உணரும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளதுடன், கற்பித்தல் முறை, பாடத்திட்டத்தையும் மாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Comments are closed.