வங்கி வாடிக்கை யாளர்களின் நலனை பாதுகாக்கத் தான் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது, ஆனால், நிதிதீர்வு மற்றும் வைப்பு காப்பீடு மசோதா குறித்து தவறாக வதந்தி பரப்பப் படுகிறது’’ என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

வங்கி தீர்வு மற்றும் வைப்பு காப்பீடு வரைவுமசோதா (எப்ஆர்டிஐ) நாடாளுமன்றத்தில் கடந்த ஆகஸ்ட்  மாதம் அறிமுகம் செய்யப் பட்டது. இதை நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுசெய்து வருகிறது. இதில் உள்ள ஒரு விதிமுறை, ‘வங்கிகள் திவால் நிலைக்குசென்றால், வாடிக்கையாளர்களின் சேமிப்பு பணத்தை பயன் படுத்தி திவால் பிரச்னைக்கு தீர்வு காண  இந்தமசோதா வழி வகுக்கிறது’ என நிபுணர்கள் சிலர் கருத்துகூறினர். இதனால், இந்த விதிமுறைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.


இந்நிலையில், டெல்லியில் நேற்று நடந்த இந்தியதொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பின் (எப்ஐசிசிஐ) 90வது ஆண்டு பொது கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசியதாவது:

நாட்டில் உள்ள வங்கி நடைமுறைகளை பலப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், எப்ஆர்டிஐ மசோதா குறித்துவதந்திகள் பரப்படுகின்றன. வாடிக்கையாளர் நலன் மற்றும் அவர்களின் சேமிப்பை பாதுகாக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஆனால், அதற்கு முரணாக வதந்தி பரப்பப்படுகிறது. வங்கிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் பாதுகாக்கப்படும் போது, நாட்டு நலனும் பாதுகாப்பாக இருக்கும். இதுபோன்ற வதந்தியை போக்க எப்ஐசிசிஐ செயல்படவேண்டும். வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், வங்கிசாரா நிதி சேவை நிறுவனங்கள் மற்றும் பங்குச்சந்தைகள் திவால்நிலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டால் அவற்றை சமாளிப்பதற்கான விதி முறைகளை உருவாக்கத்தான் எப்ஆர்டிஐ மசோதா வழிவகுக்கிறது. இதற்காக உருவாக்கப் படும் ‘தீர்வு வாரியம்’ என்ற தனிஅமைப்பு, இந்த நடைமுறைகளை கண்காணித்து நிதிநிறுவனங்கள் திவால் ஆவதை தடுக்கும். அந்தநிறுவனத்தின் கடன்களை தள்ளுபடி செய்யும். திவாலாகும் நிறுவனங்களை காப்பாற்ற, அதன்கடன்களை ரத்து செய்யவும் அல்லது அதன் கடனை மாற்றிய மைக்கவும் இந்த அமைப்புக்கு எப்ஆர்டிஐ அதிகாரம் அளிக்கிறது. இவ்வாறு மோடி பேசினார்.

எப்ஐசிசிஐ கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘‘வங்கிகளின் வராக் கடன் பிரச்னைகள் முந்தைய ஆட்சியில்இருந்த ‘பொருளாதார நிபுணர்களால்’ ஏற்பட்டதுதான். சிலதொழிலதிபர்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி கடன் அளிக்கும்படி அவர்களால் வங்கிககளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதன் மூலம், மக்கள்பணம் கொள்ளையடிக்கப் பட்டது. நிலக்கரி சுரங்க ஊழல், காமன்வெல்த் ஊழல்களை விட இந்தகடன் ஊழல் மிகப்பெரியது’’ என்றார்

Leave a Reply