பெங்களூரு விவசாய அறிவியல் பல்கலைக்கழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) 107-வது இந்திய அறிவியல்மாநாடு நடைபெறுகிறது.இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திரமோடி, கர்நாடகத்திற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வருகை தந்துள்ளார்.

இதற்காக டெல்லியில் இருந்து தனிவிமானத்தில் இன்று மதியம் 2 மணியளவில் பெங்களூருவில் உள்ள எச்ஏஎல். விமான நிலையத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வந்திறங்கினார் அவரை கர்நாடகமுதலவர் எடியூரப்பா, கவர்னர் உள்பட பலர் வரவேற்றனர்.பின்னர் அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம்  துமகூருவில் உள்ள சித்தகங்கா மடத்திற்கு சென்றார்.சித்தகங்கா மடத்தில் உள்ள மறைந்தமடாதிபதி சிவக்குமார சுவாமியின் சமாதியில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

பின்னர் சித்தகங்கா மடத்தில் உள்ள மாணவ, மாணவிகளுடன் அவர் கலந்துரை யாடினார். பின்னர் பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது கூறியதாவது:-இந்தபுனிதமான நிலத்திலிருந்து 2020 ஆம் ஆண்டைத் தொடங்குகிறேன் என்பது எனது அதிர்ஷ்டம். ஸ்ரீ சித்தகங்க மடத்தின் இந்தபுனித ஆற்றல் நம் நாட்டு மக்களின் வாழ்க்கையை வளமாக்க விரும்புகிறேன்.

பாகிஸ்தானில் இருந்துவரும் சிறுபான்மையினரை அவர்களின் தலைவிதி எப்படியும் போகட்டும் என நாம் விட்டுவிடமுடியாது; அவர்களை பாதுகாக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிகட்சிகள் இந்தியாவின் பாராளுமன்றத்திற்கு எதிராக நிற்கின்றன.நீங்கள் கோஷங்களை எழுப்புவது என்றால் பாகிஸ்தானில் உள்ள சிறுபான் மையினர் மீதான அட்டூழியங்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்புங்கள்.இன்று இந்திய நாடாளுமன்றத்திற்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள், பாகிஸ்தானின் நடவடிக்கையை சர்வதேசளவில் அம்பலப்படுத்த வேண்டிய அவசியம் இன்று உள்ளது என்று நான் கூற விரும்புகிறேன்.

நீங்கள் போராட்டம் நடத்த வேண்டு மானால், கடந்த 70 ஆண்டுகளில் பாகிஸ்தான் நடத்திய அட்டூழியங்களுக்கு எதிராக குரல் எழுப்புங்கள்.பாகிஸ்தான் மதத்தின் அடிப்படையில் உருவாக்கப் பட்டது, மத சிறுபான்மையினர் அங்கு துன்புறுத்தப் படுகிறார்கள். துன்புறுத்த பட்டவர்கள் அகதிகளாக இந்தியாவுக்கு வரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஆனால் காங்கிரசும் அதன் நட்புகட்சிகளும் பாகிஸ்தானுக்கு எதிராக பேசவில்லை, மாறாக அவர்கள் இந்த அகதிகளுக்கு எதிராக பேரணிகளை நடத்துகிறார்கள் 21 ஆம் நூற்றாண்டின் மூன்றாவது தசாப்தத்தில் இந்தியா புதிய ஆற்றலுடனும், புதுப்பிக்கப்பட்ட வீரியத்துடனும் நுழைந்துள்ளது. கடந்த தசாப்தம் தொடங்கிய போது நாட்டில் என்ன மாதிரியான சூழ்நிலை இருந்தது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். ஆனால் இந்த மூன்றாவது தசாப்தம் எதிர்பார்ப்புகள் மற்றும் அபிலாஷைகளின் வலுவான அடித்தளத் துடன் தொடங்கியுள்ளது என கூறினார்.

Comments are closed.