ஜனவரி 27-ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம்வந்து மதுரையில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் தட்ஷிண பாரத் ஹிந்தி பிரச்சார் சபாவின் 82ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றவர், இந்திமொழியின் சிறப்புக்களை எடுத்துரைத்தார். பின், தியாகராய நகரில் கட்சி நிர்வாகிகளிடம் உரையாற்றிய அவர், குறிப்பிட்ட சிலகட்சிகளை போன்று தேர்தல்நேரத்தில் அதை கொடுப்போம் இதை கொடுப்போம் என்று சொல்லாமல், நீண்ட கால நலத்திட்டங்களையும் கொடுப்போம் என மக்களிடம் எடுத்துரைக்குமாறு கூறினார்.

பிரதமர் மோடிக்கு ராகுல் போட்டியில்லை எனக் கூறியவர், ராகுல் அம்மாவுக்கு பிள்ளை என்பது தவிர அவர் வேறு ஒன்றுமில்லை என கருத்துதெரிவித்தார். சாதாராண ஏழைவீட்டில் பிறந்து படிப்படியாக உயர்ந்து இன்று மோடி பிரதமராக உயர்ந்துள்ளார் மோடி என்றும்,, ராகுல் பெரிய குடும்பத்தில் பிறந்து நேரடியாக உயரதுடிப்பவர் என்பதை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

Leave a Reply