நீர்வழிப் பாதைகளை அதிகரித்து போக்குவரத்து கட்டணங்களை குறைக்க மத்தியஅரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின்கட்காரி தெரிவித்தார். மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது.

மொத்த சரக்குபோக்குவரத்தில் நீர்வழிப் பாதைகள் மூலம் 3.5 சதவீதம் மட்டுமே நடக்கிறது. அடுத்த ஐந்தாண்டுகளில் இதனை 15 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டிருக்கிறோம். தற்போது சரக்குபோக்குவரத்து கட்டணம் 18 சதவீதமாக இருக்கிறது. அதிகளவு நீர்வழி சாலைகளை பயன்படுத்தும் போது இதனை 12 சதவீதமாக குறைக்க முடியும். சீனாவில் 8 சதவீதமாக சரக்குபோக்குவரத்து கட்டணம் இருக்கிறது. இதனை குறைக்க மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

சாலை வழியாக போக்குவரத்தில் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.1.5 செலவாகிறது. ரயிலில் ஒருகிலோமீட்டருக்கு ரூ.1 செலவாகிறது. ஆனால் நீர்வழிப் போக்குவரத்தில் இதேதொலைவுக்கு 20 பைசா மட்டுமே செலவாகிறது.

இதனால் நீர்வழி போக்குவரத்தை அதிகரிப்பது மத்திய அரசின் பிரதான திட்டங்களில் ஒன்றாக இருக்கிறது. கப்பல்கட்டும் தளங்களுக்கு மானியம்கொடுக்க திட்டமிட்டுள்ளோம். 2,000 நீர் துறைமுகங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply