நாடுமுழுவதும், நெடுஞ்சாலை அமைக்கும் பணிகளை, சாலைமார்க்கமாக சென்று கண்காணிப்பதில், காலதாமதம் ஏற்படுவதால், விமானத்தை பயன் படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

 

மத்திய சாலைபோக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் சார்பில், பலமாநிலங்களில், நாற்கர சாலை மற்றும் ஆறுவழி சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பொருளாதார வளர்ச்சிவேகம் பெற, சாலைகள் முக்கியம் என்பதால், மத்தியஅரசும் இதற்கு முன்னுரிமை வழங்கிவருகிறது. 'இந்த ஆண்டு மார்ச்சுக்குள், சாலை பணிகளுக்காக, 1.5 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்' என, துறையின் அமைச்சர் நிதின்கட்காரி ஏற்கனவே அறிவித்துள்ளார். மேலும், ஒவ்வொரு நாளும், முதலில், 30 கிலோ மீட்டர் துாரத்திற்கும், பின், 100 கி.மீ., துாரத்திற்கும் சாலைகள் அமைக்கும்வண்ணம், பணிகளை வேகப்படுத்தவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


சாலை அமைக்கும் பணிகளை பார்வை யிட்டு, அவற்றை துரிதப்படுத்த அதிகாரிகள், தற்போது சாலை மார்க்கமாகவே பயணம் செய்கி ன்றனர். இதனால், தேவையற்ற காலதாமதமும், சிரமமும் ஏற்படுகிறது. எனவே, நெடுஞ்சாலை அமைக்கும் பணிகளை கண்காணிப் பதற்காக, விமானத்தை பயன் படுத்த அந்த துறையினர் முடிவுசெய்துள்ளனர். இதற்காக,விமானத்தை வாங்கவோ அல்லது வாடகைக்கு அமர்த்தவோ திட்டமிடப்பட்டுள்ளது.

Tags:

Leave a Reply