திரு. கல்யாணராமன் அவர்கள் முகநூலில் சில கருத்துக்களை பதிவு செய்ததால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கருத்து சுதந்திரத்தை பல சமயங்களில் ஓங்கி ஒலிக்கும் இந்த தருணத்தில் இத்தகைய கைது நடவடிக்கை ஏன்?

சகிப்புத்தன்மையை பற்றி பல சமயங்களில், பேசப்பட்டுக் கொண்டிருக்கும் இந்நாளில் இந்த கைது எந்த சகிப்பின்மையைக் காட்டுகிறது. முகநூலில் தாக்கி எழுதுவதற்கு உடனே கைது செய்கிறது தமிழக காவல்துறை! ஆனால் நேரிடையாக தாக்கி, காயம் ஏற்படுத்தி உயிருக்குப் போராடி சிகிச்சை பெற்றுவரும், பாஜக வின் மூத்த நிர்வாகி சிவபிரகாசத்தை தாக்கியவர்கள் இன்று வரை கண்டுபிடிக்கப்படவும் இல்லை, கைது செய்யப்படவும் இல்லை?! ஆக நேரில் தாக்கியவர்களை விட்டு விடுவார்கள். முகநூலில் தாக்கியவரை கைது செய்வார்கள். இது எவ்வகையில் நியாயம்?

கருத்துக்களுக்கு எதிர் கருத்துக்கள் வரலாம். அதற்கு கைது என்றால், கருத்து சுதந்திரத்தைப் பற்றி தமிழகத்தில் பேசுவதற்கு உரிமை உள்ளதா? இத்தகைய பாராபட்சமான நடவடிக்கையை தமிழக காவல்துறை உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும். இந்து இயக்கத்தை சார்ந்தவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள், கடுமையாக தாக்கப்பட்டிருக்கிறார்கள். அதையெல்லாம் கண்டு கொள்ளாத காவல்துறை மற்ற மதத்தை சார்ந்தவர்களை விமர்சித்து பதிவு போட்டால் கூட படுவேகமாக வந்து கைது செய்வது ஏன் என்பதை பொதுமக்களுக்கு விளக்க வேண்டும்.

அதுமட்டுமல்ல இந்த பாராபட்சமான நடவடிக்கையை விடுத்து, திரு. கல்யாணராமன் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு
என்றும் மக்கள் பணியில்

(டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன்)

Tags:

Leave a Reply