உறவுகள் இல்லாத வாழ்க்கை எந்த உயிரிலும் கிடை யாது.தனி மனித வாழ்விலேயே தவிர்க்க முடியாத உறவுகள் ஒட்டிக்கொ ண்டு இருப்பது வழக்கம். அரசியல் வாதியின் உறவினர் கள் என்றால் இன்னும் கொஞ்சம் அதிகமாக உறவுகள் சட்டை பையில் அவரின் விசிட்டிங் கார்டை வைத்துக் கொண்டுபடம் காட்டிக்கொண்டு இருப்பார்கள்.

ஒரு ஆளும்கட்சிஎம்எல்ஏவின் உறவினர்கள் என்றால் இரண்டு மூணு தலைமுறைக்கு உள்ள அவர்களின் சொந்தங்கள் இந்த ஊரு எம்எல்ஏ யாரு தெரியுமா..எங்க அப்பாவோட அண் ணன் பொண்டாட்டிக்கு சித்தப்பா இருக்கிறார்ல அவரோடமனைவியோடு கூடப்பொறந்த பெரிய அக்காவை கட்டிய வரோட தங்கச்சி பையன்.. அதா வது எனக்கு அண்ணன் முறை என்று உதார்விடு வது நம்முடைய பழக்கம்

இதுவே ஒரு அமைச்சர் என்றால் அனைத்து தலை முறை யை சேர்ந்த உறவினர்களும் அவரின் வீட்டின் வாசலிலே யே படுத்திருப்பார்கள்.அமைச்சருக்கு அடுத்து ஒரு முதல மைச்சரின் சொந்தங்கள் என்றால் முதல மைச்சர் வீட்டில்இருப்பதோடு.காலப்போக்கில் அவர்கள் இருக்கும் வீட்டி னையே முதல்அமைச்சரின் வீடு மாதிரி உருவாக்கி விடு வார்கள்.

ஆனால் பாருங்கள் டெல்லியில் 7,ரேஸ் கோர்ஸ் ரோடி ல் இருக்கும் பிரதமர் வீட்டில் பிரதமரை தவிர வேறு எந்த
சொந்தங்களும் இல்லை.பெற்ற தாயை கூட தன்னுடன்
தங்க வைக்கவில்லை.ஏன்னா அம்மாவை பார்க்கணும்
பாட்டியை பார்க்கணும் பெரியம்மாவை பார்க்கணும் முப்பத்தாவை பார்க்கணும் என்று வரும் உறவுகள் நிரந் தரமாக அங்கேயே செட்டிலாகி விடும் சூழல் உள்ளதால்
தாயை கூட தள்ளி வைத்து விட்டு 12 ஏக்கர் கொண்ட வீட்டில் தனியாக வாழ்ந்து வருகிறார் மோடி

டெல்லியில்நம்பர் 7,ரேஸ் கோர்ஸ் ரோடில் உள்ள பிரைம் மினிஸ்டர் வீடு 1980 ல் கட்ட ஆரம்பிக்கபட்டு இதில் உள் ளே நுழைந்த முதல் பிரதமர் ராஜீவ்காந்தி தான். தன்னு டை ய  மனைவியுடன், அவருடைய உறவினர்கள்,மற்றும் குழந்தைகள் பிரியங்கா ராகுல் என்று குடும்பம் குட்டியோட ராஜீவ் காந்தி இங்கே நுழையும் பொழுது 1984 ம் ஆண்டில் இறுதியாகிவிட்டது.

நம்முடைய பிரதமரின் இல்லத்திற்கு உள்ள விசேஷ மான பெயர் என்னவென்றால் பஞ்சவடி.அதாவது ராமரும் சீதாவும் வனவாசத்தின் பொழுது இப்போதைய நாசிக்கில் உள்ள காட்டுப் பகுதியில் வாழ்ந்த வீட்டின் பெயர்…..நல்லா இருக்குல்ல

ஒரு காலத்தில் ராமர் மாதிரியே குணம் கொண்ட ஒருவ ர் நாட்டை ஆள்வார் என்று 35 வருசங்க ளுக்கு.முன் திட்டமிட்டுகாட்டில் ராமர் வாழ்ந்த வீட்டின் பெயரை நாட்டில் வாழும் பிரதமரின் வீட்டுக்கு சூட்டியுள் ளார் கள்.எதற்கு தெரியுமா? தர்மம் காக்க எதையும் இழந்து வாழ வேண்டும் என்பதற்காக..

இது வரை பஞ்சவடியில் வாழ்ந்த பிரதமர்கள் யாரும் குடும்பத்திற்கு சேவை செய்வதே நாட்டிற்கு சேவை செய் வது என்று வாழ்ந்தநிலையில் மோடி மட்டும் குடும்ப உறவுகளை தவிர்ப்பதே தேச சேவையின் துவக்கம் என்பதை தெளிவாக அறிந்து செயல்பட்டு வருகிறார்.

ராமர் மாதிரியே மூன்று சகோதரர்களுடன் பிறந்த நம்மு டைய பிரதமர் மோடிக்கு பிரகலாத் மோடி என்கிற தம்பி
உண்டு.இவர் குஜராத்தில் வத் நகரில் ஒரு ரேஷன் கடை யில் வேலை பார்த்தவர்..அவரின் மகள் நிகுஞ்பென்.
.நிகுஞ்பென்னின் குடும்பம் சராசரி வருமானம் கொண்ட குடும்பம்.. நிகுஞ்சின் கணவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து ஒரு சிறிய வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

கணவரின் வருமானம் போதாததால்தன்னுடைய குடும்ப வருமானத்திற்காக தையல் வேலை செய்தும் குட்டி பசங் களுக்கு டியூசன் எடுத்தும் வாழ்க்கை நடத்தி வந்தார். பிரதமரின் தம்பி மகளாக இருந்தாலும் அதை நிகுஞ் ஒரு போதும் தவறாக பயன்படுத்தியது கிடை யாது. அவர் வசிக்கும் பகுதியில் உள்ள அரசு அதிகாரி கள் பலருக்கும் நிகுஞ்பென் நரேந்திர மோடியின் தம்பி மகள் என்பது தெரியாதாம்.பெண் என்றால் இப்படிய ல்ல வா இருக்க வேண்டும்,

ஆனால் பாருங்கள்.விதியின் கொடுமையை..நீண்ட நாட் களாக இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிகுஞ் பென் கடந்த வாரம் இறந்து விட்டார்.அவருடைய உடல் நிலை மிகவும்சீரியஸாக இருக்கும் போது மோடிக் கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அச்சமயம், பிரதமர் மோடி சீனாவில் நடந்த ஜி-20 நாடுகள் பங்கேற்ற மாநாட்டில் இருந்தார் கடைசி யில் நிகுஞ்பென் மரணசெய்தியும் மோடிக்கு தெரிவிக்கப்பட்டது.

பிரதமரின் பயணத் திட்டத்தின் காரணமாக தனது தம்பி மகளின் இறுதிசடங்கில் கூட கலந்து கொள்ளாத மோடி யின் கடமை உணர் வு ஆச்சரியபட வைக்கிறது என்றால் உடன் பிறந்த தம்பியின் மகளை தன்னுடைய அதிகாரத் தை பயன் படுத்தி டெல்லி யில் சிறந்த மருத்துவமனை களில் சேர்த்து அவரின் உயிரை காப்பாற்ற முனையாத மோடி யின் செயல் அதிசயமானது.
.
பிரதமரின்சொந்தங்களின் ஆடம்பர தேவைகளுக்கே இது வரை இருந்த பிரதமரின் அலுவலகம் செயல்பட்டு வந்தபொழுது ஒரு பிரதமரின் தம்பி மகளின் உயிரை காப்பாற்ற உதவாமால் பெற்றவர்களே பிள்ளையை பாத்துக்க்கொள் ளட்டும் என்று செயல்பட்ட செயல் மனி தாபிமான ரீதியில் தவறானது தான்.

இருந்தாலும் தன்னுடைய பொது வாழ்வில் தம்பி மகளி ன் மருத்துவத்திற்கு அரசு அதிகாரத்தை பயன்படுத் தி உதவினார் என்கிற சிறு அவச்சொல் கூட தன்னுடைய காதில் விழக்க்க்கூடாது என்று தன்னுடைய அலுவலக த்தைஅறிவுறுத்தியுள்ள மோடிக்கு பொது வாழ்வில் மட்டுமல்ல ஓவ்வொரு மனிதனின் தனிப்பட்ட வாழ்வி லும் நேர் மை இருக்க வேண்டும் என்று விரும்பும் உண்மையான இந்திய குடிமகன்களின் தலை வணங்கி ய பாராட்டுக்கள்.

நன்றி விஜயகுமார்

Leave a Reply