திருவள்ளுவர் மாவட்டத்தில் டெங்குபாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில், சென்னை மாநகராட்சியில் நோய்தடுப்பு நடவடிக்கைகளை போர்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

மோடி அரசின் சாதனைகளை விளக்கும் துண்டுபிரசுரங்களை, சென்னை சாலிகிராமம் பகுதியில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பொதுமக்களிடம் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், தமிழகத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் 8 ஆயிரம்கோடி ரூபாய் மேல் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக மத்திய குற்றப்பதிவு ஆவணத்தில்  தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுட்டிகாட்டினார்.

மேலும், திருவள்ளுவர் மாவட்டத்தில் டெங்குபாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில், சென்னை மாநகராட்சியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை போர்காலஅடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Tags:

Leave a Reply