கருப்புபணத்தை தடுக்கும் வகையில், அந்நிய நேரடி முதலீடு விவரங்களை உளவுத்துறையுடன் பகிர்ந்துகொள்ள ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. வரி செலுத்தாத வர்களின் புகலிடமாக உள்ள நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடுசெய்வது குறித்து ரா உளவு அமைப்பு சமீபத்தில் கவலை தெரிவித்திருந்தது. இதைதொடர்ந்து கருப்பு பணத்தை தடுக்கும் முயற்சிகளின் ஒருபகுதியாக, பொருளாதார குற்றங்களை தடுப்பது பற்றிய ஆலோசனை கூட்டம் வருவாய்துறை செயலாளர் தலைமையில் சமீபத்தில் நடந்தது.

 

வெளிநாடுகளில் இருந்து பங்குச் சந்தைகள் மற்றும் நிறுவனங்களில் செய்யப்படும் முதலீடுகள் மூலம் கருப்புபணம் வருவது குறித்து ஏற்கெனவே தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் மத்தியபொருளாதார புலனாய்வு அமைப்பானது, இத்தகைய நிறுவனங்களுக்கு நிதி எங்கிருந்து வந்தது என்பது குறித்து விவரங்களை திரட்டி கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என அறிவுறு த்தியது. ஆனால், இது பின்னர் செயல்பாட்டுக்கு கொண்டுவரப் படவில்லை.

இதன்பிறகு நடைபெற்ற உளவுதுறை பணிக்குழு கூட்டத்தில், அந்நிய முதலீடுகள் பற்றிய விவரங்களை திரட்டி பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து ஐபி மற்றும் ரா அமைப்புகளோடு அந்நிய நேரடி முதலீட்டு விவரங்களை பகிர்ந்து கொள்வதற்கு ரிசர்வ்வங்கி முடிவு செய்துள்ளதாக சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளை ஈர்க்கும்வகையில் மத்திய அரசு நடைமுறைகளை எளிமைப் படுத்தி வருகிறது. இதற்காக மேக் இன் இந்தியா திட்டங்களும் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட ஒருசூழ்நிலையில் இந்த கண்காணிப்பு அவசியம் என கருதப்படுகிறது. தானி யங்கி முறையில் பல துறைகளில் முதலீடுசெய்ய அந்நிய முதலீடு மேம்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியிருந்தாலும், பணம் எங்கிருந்து வருகிறது. என்பது உள்ளிட்ட தகவல்கள் ரிசர்வ்வங்கிக்கு மட்டுமே தெரியும். எனவே இந்த தகவல் பராமரிப்பை ரிசர்வ்வங்கி மேற்கொள்ள வேண்டும் என ஆலோசனை வழங்கபட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இத்தகைய முதலீட்டு விவரங்களை இணைய தளத்தில் வெளியிட ரிசர்வ் வங்கி பரிசீலனை செய்வதாக நிதியமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
2016-17ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல்செய்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, உணவு உற்பத்தி துறையில் நூறுசதவீத அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படும் என அறிவித்துள்ளார். துறைமுகங்கள், விமான நிலையங்கள், நெடுஞ் சாலைகளை மேம்படுத்த அந்நியநேரடி முதலீடு அவசியமாக உள்ளது. கடந்த 2015ம் ஆண்டில் இந்தியாவில் அந்நியநேரடி முதலீடு இரட்டிப்பாகி 5,900 கோடி டாலராக இருந்தாக, வர்த்தகம் மற்றும் மேம்பாடு பற்றிய ஐ.நா கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply