சுதந்திர போராட்ட வீரர்களான பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோரின் நினைவுதினத்தை யொட்டி, அவர்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி புதன் கிழமை புகழஞ்சலி செலுத்தினார்.

 பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோர் ஆங்கிலேயர்களால் கடந்த 1931-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி தூக்கிலிடப்பட்டனர். அவர்களது நினைவுதினம் நாடு முழுவதும் புதன் கிழமை அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில், அவர்கள் 3 பேரையும் நினைவு கூர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்தினார்.

இது குறித்து சுட்டுரையில் அவர் புதன் கிழமை வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:  இளம் தலை முறையினருக்கு ஊக்கமளித்து வரும் பகத் சிங், ராஜகுரு, சுக்தேவ் ஆகியோரின் ஈடு இணையில்லா வீரம், தேசப் பற்று, சுதந்திரத்துக்காக தந்த உயிர்தியாகம் ஆகியவற்றுக்குத் தலை வணங்குகிறேன் என்று அந்தப் பதிவில் மோடி குறிப்பிட்டுள்ளார்.

 அவர் வெளியிட்ட மற்றொருபதிவில், இந்திய விடுதலை போராட்டங்களில் பங்கேற்றவரும், மறைந்த மூத்த அரசியல் தலைவருமான ராம்மனோகர் லோகியாவின் பிறந்த தினத்துக்கும், காஞ்சி மடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்திக்கும் (மார் 23) பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.

Leave a Reply