அனைத்து பெண்களையும் சபரிமலைக்குள் அனுமதிக்கலாம் என்ற தீர்ப்பை எதிர்த்துபோராடும் பக்தர்கள் பின்னால் பாரதிய ஜனதா தொடர்ந்து நிற்கும் என கேரள பா.ஜ தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை தெரிவித்துள்ளார். 

 பல்வேறு இந்து அமைப்புகள் கேரளா, தமிழகம் உள்ளிட்ட பலமாநிலங்களில் போராட்டம் நடத்தினர். சபரிமலைக்குள் செல்ல முயற்சிக்கும் பெண்களை தடுக்கும் சம்பவங்களும் நடைபெற்றன. போராட்டங்களின்போது வன்முறை நடத்தியதாக 3300க்கும் மேற்பட்டோர் இதுவரை கைது செய்யபட்டுள்ளனர். 

5 நாட்கள் பூஜைக்குபிறகு, அக்டோபர் 22ம் தேதி சபரிமலை கோவில் மூடப்பட்டது. அடுத்ததாக நவம்பர் 5ம் தேதி மாலை கோவில் நடை மீண்டும் திறக்கப்படும். இந்நிலையில், சபரி மலை விவகாரத்தில், பெண்களை அனுமதிக்க மறுத்து போராட்டம் நடத்தும் பக்தர்களுடன் பா.ஜனதாவும் போராட்டம் நடத்தும் என கேரள பா.ஜ தலைவர் ஸ்ரீதரண் பிள்ளை தெரிவித்துள்ளார். "நவம்பர் 5ம்  தேதி கோவில் திறக்கப்படும்போது, முழு பலத்தோடு பக்தர்கள் பின்னால் நாங்கள் இருப்போம்" என்று அவர் கூறினார். 

"கேரளாவின் நிலைமை எமர்ஜென்ஸி காலத்தைவிட மோசமாக உள்ளது. ஐயப்ப பக்தர்களின் உரிமைக்காக அமைதியாக போராட்டம் நடத்திய வர்கள் நடுராத்திரியில்  கைது செய்யப் படுகின்றனர்" என்றும் கூறினார். 

Leave a Reply