தேசிய பசுமை நெடுஞ் சாலைகள் திட்டத்தின் கீழ் 1 லட்சம் கி.மீ தூரத்துக்கு மரக்கன்றுகள் நடப்படும். இதன்மூலம் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக் கும் என அரசு தெரிவித்துள்ளது.

டெல்லியில் நேற்று தேசியபசுமை நெடுஞ்சாலைகள் திட்டத்தை தொடங்கிவைத்து மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி பேசியதாவது:

1,500 கி.மீ தொலைவுக்கு மரக் கன்றுகள் நடும் திட்டம் இன்று (நேற்று) தொடங்கப் பட்டுள்ளது. ஒரு கி.மீ தூர பாதையை பசுமை யாக்குவதன் மூலம் 10 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அந்தவகையில் 1,500 கி.மீ தூர பாதைமூலம் 15,000 பேர் பயனடையவுள்ளனர்.

அந்தவகையில் 1 லட்சம் கி.மீ தேசிய நெடுஞ்சாலையை பசுமையாக்கும் திட்டம் மூலம் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். விரைவில் 2 லட்சம் கி.மீ தூரத்துக்கு திட்டம் நீட்டிக்கப்படும்.

இந்ததிட்டத்தில் இதுவரை 10 மாநிலங்கள் மத்திய அரசுடன் கைகோர்த்துள்ளன. அவற்றில் ஹரியாணா மாநிலம் 415 கி.மீ, ஜம்முகாஷ்மீர் 100 கி.மீ, தெலங்கானா 150 கி.மீ, ஆந்திரா 360 கி.மீ, மத்தியப்பிரதேசம் 150 கி.மீ, அஸ்ஸாம் 50 கி.மீ தூர பாதைக்கு மரக் கன்றுகள் நட ஒப்புக்கொண்டுள்ளன இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply