நாடெங்கிலும் மிகபரப்பரப்பாக பேசப்பட்டு வரும் நிர்மலா சீதாராமனின் இரண்டாவது பட்ஜெட்டுக்காக, பிரதமர் மோடி தனிப்பட்டமுறையில் 100 மணி நேரத்தை செலவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து வெளியான செய்தியில், பிசினஸ் டுடேவிடம், நிதி அமைச்சக வட்டாரங்கள் பிரதமர் நரேந்திரமோடி மத்திய பட்ஜெட் 2020க்காக 100 மணி நேரத்தை தனிப்பட்ட முறையில் செலவு செய்தார்.

மேலும் நீங்கள் இந்தபட்ஜெட்டை விரும்பலாம் அல்லது வெறுக்கலாம், ஆனால் பிரதமரின் நூறுமணி நேரம் உழைப்பு இதில் உள்ளது , பிரதமரின் முத்திரை இந்த பட்ஜெட்டில் உள்ளது என்பதை தெரிந்துகொள்ளுங்கள் என்று அந்த அதிகாரிகள் வட்டாரத்தில் கூறியுள்ளனர் .

மேலும் பிரதமர் தொழில் துறையினரிலிருந்து, பொருளாதார வல்லுனர்கள்வரை ஒவ்வொருவராக சந்தித்தார். மேலும் பணத்தை அச்சிடுமாறு அறிவுறுத்தியவர்கள் உட்பட ஒவ்வொருவரின் ஆலோசனையையும் கேட்டறிந்தார். மேலும் வரவுசெலவு திட்டத்தின் நம்பகத்தன்மையை அதிகரிப்பது மற்றும் வாங்கும்தன்மையை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதில் அவர் மிகதெளிவாக இருந்தார்

குறிப்பாக சொல்லப் போனால் இந்த பட்ஜெட்டில் பல முதல்விஷயங்கள் உள்ளன. இது ஆட்சிக்கு இடத்தை ஒதுக்கும் முதல்பட்ஜெட் என்றும் கூறப்படுகிறது. இதில் நிதிமேலாண்மை குறித்த முழு அத்தியாயம் உள்ளதாகவும், இந்தபட்ஜெட் பாலினம் மற்றும் பெண்கள் பற்றி பேசுவதாகவும் உள்ளது. இதுதவிர வாழ்க்கை முறைகளை பற்றியும் பேசுவதாக உள்ளதாகவும் புகழாரம் சூட்டியுள்ளனர்.

மேலும் இந்தபட்ஜெட் வருமானம் மற்றும் முதலீட்டையும் அதிகரிக்கும், தேவை மற்றும் நுகர்வையும் அதிகரிக்கும். நிதிஅமைப்பில் புதியவீரியம் மற்றும் கடன் ஓட்டத்தை கொண்டுவரும் என்று நான் நம்புகிறேன் என்று பிரதமர் கூறியதாகவும் செய்திகள் கூறுகின்றன. மேலும் முதலீடு வேலைவாய்ப்பின் மிகப் பெரிய இயக்கி என்றும் வர்ணித்ததாகவும் கூறப்படுகிறது.

இதுதவிர முதலீட்டை ஊக்குவிப்பதில் வரலாற்றில் இல்லாதளவுக்கு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன என்றும் கூறியதாகவும் கூறப்படுகிறது. மேலும் பத்திரசந்தையை வலுபடுத்தவும், உள்கட்டமைப்பின் நீண்டகால நிதியுதவிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்றும் கூறியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Comments are closed.