நாட்டின் பொருளாதாரத்தை  சீர்படுத்தும்  நிலையில், பட்ஜெட் தொடர்பான பணிகளை பிரதமர் மோடியே நேரடியாக கவனிக்க தொடங்கியுள்ளார்.
மத்திய பட்ஜெட் வழக்கமாக பிப்ரவரி மாதம் கடைசிவாரத்தில் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். இந்த முறையில் மாற்றம் செய்யப்பட்டு பொதுபட்ஜெட் மற்றும் ரயில்வே பட்ஜெட் இவை இரண்டும் சேர்த்து பிப்ரவரி முதல் வாரத்திலேயே தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

அந்தவகையில், நடப்பாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை ஜனவரி 31ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதிவரை இரண்டு கட்டங்களாக நடத்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக்குழு பரிந்துரை செய்துள்ளது. பிப்ரவரி 1ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார் என தெரிகிறது.

பட்ஜெட் தொடர்பான பணிகளை வழக்கமாக பிரதமர் அலுவலகம் மேற்பார்வையிடுவது வழக்கம். ஆனால், பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்தில் பட்ஜெட் தொடர்பான பணிகளை பிரதமர் மோடியே நேரடியாக கவனித்து வருகிறார். அத்துடன் பொருளாதாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் குறித்து பொருளாதார வல்லுநர்கள், தொழில்துறையினர் உள்ளிட்ட பலருடனும் பிரதமர் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.

மேலும் மத்திய பட்ஜெட் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்குமாறும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Comments are closed.