டெல்லியில் உள்ள விஜய்பவனில் டிஜிட்டல் பணப் பரிமாற்ற டி-தன் மேளா நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லி கலந்துகொண்டார்.
 
அப்போது அவர் பேசியதாவது:
 
* ரொக்கமில்லா பண பரிமாற்றம் என்பதன்நோக்கம், குறைந்தளவு ரொக்கம் பயன்படுத்துவதாகும். முழுவதும் ரொக்கம் பயன்படுத்தக் கூடாது என்பதல்ல. 
 
* ஆனால் சில அரசியல்கட்சிகளும், மீடியாக்களும் தவறாக தகவல் தருகின்றன. இந்த விளக்கம் முற்றிலும் தவறானது. 
 
* பிரதமர் மோடி நேரடியாகவோ அல்லது மறைமுக  மாகவோ அத்தகைய அறிக்கையில் குறிப்பிடவில்லை.
 
* பில்கேட்ஸ் என்னிடம்கூறினார் எங்களிடம் 100 கோடி கைபேசிகள் உள்ளது என்றார். நான் கூறினேன் 109 கோடி ஆதார் அட்டைகள் உள்ளது.  அதனை வைத்து கொண்டு நாங்கள் டிஜிட்டல் இந்தியாவை செழிக்க செய்வோம்.
 
*  ஆதார் அட்டைமூலமான மின்னணு பரிவர்த்தனைக்கு கைவிரல் ரேகை மட்டுமே போதுமானது.
 
*  வங்கி அட்டை, கைப்பேசி இல்லாதோருக்கு ஆதார் அட்டை மூலம் மின்னணு பரிவர்த்தனை அறிமுகம்.
 
*  மத்திய அரசின் நடவடிக்கையால் எதிர் காலத்தில் பொருளாதாரம் மேம்படும்.
 
*  வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கறுப்பு பணம் பற்றிய தகவல்களை திரட்டி வருகிறோம்.
 
*  வங்கி மூலம் பணப்பரிவத்தனை செய்தால் நாட்டின் பொருளாதாரம் வலுப்பெறும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
 
*  பணத்தாள்களை மக்கள் குறைவாகபயன்படுத்த வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம்.
 
இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply