பணத்தை சுருட்டுபவர்கள் யாரும் தப்பிக்கமுடியாது என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் மத்திய அரசும், வருமான வரித் துறையும் ஏற்படுத்தி உள்ளதாக தமிழிசை சவுந்தர ராஜன் கூறினார்.
 
தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி சென்றார். முன்னதாக அவர் சென்னைவிமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:–
 

 

ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. விலங்குகள் நல ஆர்வலர்கள் கூட மத்திய அரசைத்தான் விமர்சிக்கின்றனர். தமிழகத்தில் உள்ள எம்.பி.க்கள் ஜல்லிக் கட்டுக்காக போராட்டம் நடத்துவதை விட, அதை நடத்த தேவையான முயற்சிகளை செய்யவேண்டும். தமிழக பாரதீய ஜனதா கட்சி ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது.

 

 

தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சி பின் வாசல் வழியாக ஆட்சி அமைக்கவருகிறது என்ற வாதத்தை மறுக்கிறேன். பின்வாசல் வழியாக வரவேண்டும் என்றால், ஏன் முன்வாசல் வழியாக வருமான வரித்துறையை அனுப்ப வேண்டும்? இப்போது தான் நம்பணத்தை சுருட்டுபவர்கள் யாரும் தப்பிக்கமுடியாது என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் ஏற்பட்டு உள்ளது. இந்த நம்பிக்கையை மத்திய அரசும், வருமான வரித்துறையும் அவர்களின் நடவடிக்கையால் ஏற்படுத்திஉள்ளது இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply