ஊழல்வாதிகளை பிடிப்பதற்காகவே முன்னறிப்பின்றி ரூபாய்நோட்டுக்களை வாபஸ் பெற்றதாகவும், நேர்மையாக சம்பாதித்த மக்களின்பணம் அனைத்தும் பாதுகாப்பாக இருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டில்லியில்  3 நாட்களுக்கு இந்திய அரசியலமைப்பு தினம் கொண்டாடப் படுகிறது. இதன் துவக்கவிழாவில், இந்திய அரசியலமைப்பின் புதிய வடிவம் மற்றும், அரசியலமைப்பை உருவாக்குதல் என்ற 2 புத்தகங்களை பிரதமர் டி வெளியிட்டார். பின்னர் பேசியவர், நவம்பர் 26ம் தேதி இந்திய அரசியலமைப்பு தினம் கொண்டாடப் படுவதன் நோக்கம் குறித்த விழிப்புணர்வு இளைஞர்களிடம் ஏற்படவேண்டும். நமது வாழ்க்கையில் நமது அரசியலமைப்பு சிறப்பான இடம்பிடித்துள்ளது. அரசியலமைப்பை பற்றி நினைக்கும்போது அம்பேத்காரையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

ஜனவரி 26 ஐ நாம் எப்படி உணர்வு பூர்வமாக கொண்டாடுகிறோமோ அதேபோன்று நவம்பர் 26ஐயும் கொண்டாட வேண்டும். நவம்பர் 26 இல்லை என்றால் நம்மால் ஜனவரி 26 ஐ கொண்டாட முடியாது. இந்தியாவின் சாமானியமக்கள் அனைவரும் ஊழல் மற்றும் கறுப்புபணத்திற்கு எதிரான போரின் வீரர்களாகி உள்ளனர். முன்னறிவிப்பின்றி நாங்கள் ரூபாய் நோட்டுக்களை வாபஸ்பெற்றதாக எங்கள் மீது குற்றம் சாட்டுகிறார்கள். உண்மையில் ஊழல் வாதிகளை பிடிப்பதற்காகவே முன்னறிவிப்பின்றி இதனை கொண்டுவந்துள்ளோம். கறுப்பு பணம் வைத்திருப்போர் உஷார் ஆவதற்கு அவகாசம் கொடுக்ககூடாது என்பதற்காகவே இந்த விஷயத்தில் ரகசியம் காக்கப்பட்டது.


ரகசியம் காக்கப்பட்டதாலேயே பதுக்கி வைக்கப்பட்டிருந்த கறுப்புபணம் வெளியே வந்துள்ளது. நேர்மையாக சம்பாதித்த பணம் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளது. ரூபாய் நோட்டுதடையால் ஏராளமான நிதி அரசு கஜானாவிற்கு கிடைத்துள்ளது. விமர்சிப்பதற்கு இதுநேரமல்ல. கறுப்பு பணத்தை முற்றிலும் ஒழித்தாக வேண்டும். கறுப்பபணத்திற்கு எதிரான இந்த போரில் பங்கேற்க வேண்டியது ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமை.


பணத்தை கையில் வைத்துக் கொண்டிருக்க எந்தஅவசியமும் இல்லை. பணத்தை பரிமாற்றம் செய்வதற்கம், கையாள்வதற்கும் பலவழிகள் உள்ளன. தங்களின் பணத்தை செலவிட ஒவ்வொரு வருக்கும் உரிமை உண்டு. அதை யாரும் பறித்துக்கொள்ள முடியாது. அவர்கள் தங்களின் பணத்தை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செலவிடட்டும் என பேசினார்.

Tags:

Leave a Reply