கரும்பு சாகுபடிக்கு அதிகம் தண்ணீர் தேவைப் படுவதால் பதநீரிலிருந்து சர்க்கரை தயாரிக்க விவசாயிகள் முன்வர வேண்டும்

பனை மரம் வளர்ப்பிற்கு தண்ணீர் தேவை யில்லை , கரும்பு ஆலைகள் ஆதிக்கத்தால் பதநீர் சர்க்கரை தயாரிப்பு தொழில் நலிந்து போயுள்ளது. வரும் 2050ம் ஆண்டில் பத்து பேரில் ஒருவருக்கு மட்டுமே தண்ணீர் கிடைக்கும் உள்ளது.

கரும்பு உற்பத்திக்கு அதிகளவு நீர் தேவை. ஆனால் பனைமர வளர்ப்புக்கு தண்ணீத் தேவையில்லை. எனவே விவசாயிகள் பதநீரிலிருந்து சர்க்கரை தயாரிப்பதில் ஈடுபாடு காட்டவேண்டும்.

ஈரோடு மாவட்டம், கோபிச் செட்டிபாளையம் அருகிலுள்ள கெட்டி செவியூர் அருகே பனை சீனி மற்றும் பனை பொருட்கள் ஆராய்ச்சிவளர்ச்சி நிறுவனம் என்ற தனியார் நிறுவனம் இயங்கிவருகிறது. இந்நிறுவனம் பதனீரை கொள்முதல் செய்து, பனை சீனி (சர்க்கரை) தயாரிக்கிறது. மத்திய சிறு மற்றும் குறுந் தொழில் இணை அமைச்சர் கிரிராஜ் சிங், இந்நிறுவனத்தை நேற்று பார்வையிட்டார்.  சர்க்கரை தயாரிப்பு மற்றும் பனை மரம் ஏறும் முறை குறித்து நேரடியாக கண்டார். இதனை தொடர்ந்து விவசாயிகளிடையே பனை மரத்தின் சிறப்புகள் குறித்து அவர் எடுத்துரைத்தார்.

Leave a Reply