பதான்கோட் தாக்குதல்பின்னணி குறித்த உண்மையை கண்டறிந்து, குற்றவாளிகள் மீது கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை  அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

இந்த தாக்குதல் சம்ப வத்துக்கு பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப் பேற்பதாக தெரிவித்திருந்தது. இதையடுத்து அந்த தீவிரவாத அமைப்புமீது நடவடிக்கை எடுக்க கோரி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிடம், பிரதமர் நரேந்திரமோடி கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் பதான்கோட் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளை கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்தும்படி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை நேற்று தொலை பேசியில் தொடர்புகொண்டு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான்கெர்ரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி கூறும்போது, ‘‘பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி பேசினார். இருதரப்பு உறவுகள் மற்றும் ஆசிய பிராந்தியத்தில் நிலவும் தீவிரவாத சவால்களை முறியடிக்க முக்கியத்துவம் அளிப்பது உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து அப்போது பேசினர்’’ என்றார்.

Leave a Reply