எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாக். ஆதரிப்பதால் தற்போதைய சூழ்நிலையில் சார்க்மாநாடு நடத்திட சாத்தியமில்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.


அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ள நேபாளபிரதமர், கே.பி.ஒலி நேற்று பிரதமர் மோடியை சந்தி்த்தார். அப்போது இரு தரப்பு பரஸ்பரம் ஒத்துழைப்பு குறித்து ஆலோசித்தனர். இந்தசந்திப்பின் போது சார்க் மாநாடு ஏற்பாட்டு குழுவினர் உடனிருந்தனர். இதில் அடுத்து நடக்க உள்ள சார்க் எனப்படும் :தெற்காசிய நாடுகளின் பிராந்திய கூட்டமைப்பு ஒத்துழைப்பு அமைப்புகளின் மாநாடு நடத்துவதுகுறித்து முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதுதொடர்பாக வெளியுறவு செயலாளர் விஜய் கோஹலே கூறியது,, நேபாளில் 2014-ல் நடந்த சார்க்மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார் ஆனால் பக்கத்து நாடான பாக். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தினை ஆதரிக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் சார்க்மாநாட்டை நடத்துவது சாத்தியமில்லை என்றார்.

Leave a Reply