சென்னை விமான நிலையத்தில் தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை கூறியதாவது: ஓ.பி.எஸ்., கூறிய அமைதிப் பூங்காவாக உள்ள தமிழகத்தில்தான், கேக்கை அரிவாளால் வெட்டும்நிலை உள்ளது. பயங்கரவாதிகளின் புகலிடமாக தமிழகம் மாறிவிடக் கூடாது. சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதில் தமிழக அரசு தோல்வி யடைந்துள்ளது.

சமஸ்கிருதத்தைவிட தமிழ் பழமையான மொழி என பிரதமர் மோடி கூறியுள்ளார். தமிழகத்தில், தமிழை பா.ஜ.,வால்தான் காப்பாற்ற முடியும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

 

Leave a Reply