மறைந்த கோவாமுதல்வர் மனோகர் பரீக்கரின் உடலுக்கு பிரதமர் மோடி , ராணுவ அமைச்சர் நிர்மலா சீதா ராமன் மற்றும் மத்திய அமைச்சர்கள் பலர் நேரில்சென்று அஞ்சலி செலுத்தினர். மாலை 5.55 மணியளவில் பரீக்கர் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யபட்டது.

நீண்டகாலமாக நோய் வாய்ப்பட்டிருந்த மனோகர் பரீக்கர் நேற்று (17 ம் தேதி )இரவு காலமானார். நேர்மையான, எளிமையானவர் என பெயர் பெற்ற அவரதுமறைவு நாட்டுக்கு பேரிழப்பு என பலரும் தங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பரீக்கர் மறைந்த இன்று தேசிய துக்கதினமாக அறிவித்து தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.

 

பரீக்கர் உடல் இன்று மாலை இறுதிச் சடங்கு செய்யப் பட்டது. துப்பாக்கி குண்டுகள் முழங்கிட அவரது உடல்தகனம் செய்யப்பட்டது. நாடு முழுவதும் பலர் கோவாவுக்கு சென்று அஞ்சலிசெலுத்தி வருகின்றனர். இன்று மதியம் பிரதமர் மோடி, ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன், பா.ஜ., தலைவர் அமித்ஷா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

 

மனோகர் பாரிக்கர்  மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

மனோகர் பாரிக்கர் மறைவுசெய்தி மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது. பொது வாழ்க்கையில் மனோகர் பாரிக்கரின் சேவையை நாட்டுமக்கள் என்றும் மறக்கமாட்டார்கள். முதல்வர் பாரீக்கரின் அகால மறைவு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் உள்ள நேர்மையான மற்றும் அனைவராலும் விரும்பப்படுகின்ற அரசியல்வாதி  துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

மனோகர் பாரிக்கர் ஈடு இணையில்லாத தலைவர். உண்மையான தேசபக்தர். சிறந்தநிர்வாகி. அனைவராலும் பாராட்ட பெற்றவர். நாட்டிற்கு அவர் ஆற்றியபணிகள் பல தலைமுறையினரின் நினைவில் இருக்கும். அவரது மறைவு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று பிரதமர் மோடியும்,

தனது நோயை எதிர்த்து ஒருஆண்டுக்கும் மேலாக போராடிய கோவா முதல்வர் மனோகர் பரீக்கரின் மறைவு வருத்தமளிக்கிறது. கட்சி எல்லைகளை தாண்டி அவருக்கு அனைவரும் மரியாதை அளித்தனர். அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்தஇரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுலும்,

பரீக்கர் மறைவு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. உண்மையான தேசபக்தரை நாடுஇழந்துள்ளது. கொள்கைக்காகவும், நாட்டிற்காகவும் தனது வாழ்க்கையை பாரிக்கர் அர்ப்பணித்தவர் என்றுஅமித்ஷாவும்,

கோவா முதல்வர் பரீக்கர் மறைவு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. சிறந்தநபர். தேசப்பற்று மிக்கவரை நாம் இழந்துவிட்டோம். அர்ஜென்டினாவுக்கு அரசுமுறை பயணமாக செல்லும் வழியில், அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற பரீக்கரை சந்தித்ததை இந்த தருணத்தில் நினைவு கூறுகிறேன் என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனும் தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

.

Leave a Reply