பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட, அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலையைக் குறைக்கவும், கட்டுப்பாட்டில் வைக்கவும், அவற்றின்மீதான வரிகளை, மாநில அரசுகள் நீக்கவேண்டும்' என, மத்திய அரசு யோசனை தெரிவித்துள்ளது.

மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது வினியோகத் துறை செயலர் ஹேம் பாண்டே கடிதம் எழுதியுள்ளார்; அதில் கூறப்பட்டுள்ளதாவது: பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்டவற்றுக்கு விதிக்கும் உள்ளூர் வரிகளை, மாநில அரசுகள் நீக்க வேண்டும் வேளாண் உற்பத்தி சந்தை குழு சட்டத் திலிருந்து, அத்தியாவசியப் பொருட்களை நீக்க வேண்டும். இதன் மூலம் விவசாயிகள், இடைத் தரகர்கள் இல்லாமல், நேரடியாக பொருட்களை விற்க முடியும். விவசாயிக ளுக்கும் நல்ல விலை கிடைக்கும்; மக்களுக்கும் குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கும் அத்தியாவசிய  பொருட்கள் சட்டத்தின் கீழ், இதுபோன்ற பொருட்களுக்கு விலை நிர்ணய கொள்கையையும் உருவாக்கவேண்டும். கள்ளச் சந்தையில் விற்போர், பதுக்குவோர் உள்ளிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மத்திய அரசின், அத்தியாவசியப் பொருட்கள்தொகுப்பில் இருந்து, மாநிலங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது

Tags:

Leave a Reply