பருப்பு, தக்காளிவிலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். 
 
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நேற்று சென்னையில் இருந்து விமானம்மூலம் கோவைக்கு சென்றார். முன்னதாக அவர், விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
 
நாடுமுழுவதும் தக்காளி விளைச்சல் குறைவாக இருப்பதால் விலை அதிகரித்துள்ளது. பிரதமர் மோடி, விலைவாசி உயர்வால் மக்கள் அவதிப் படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு உள்ளார். 
 
தக்காளி உள்பட உணவுபொருட்கள் பதுக்கல், கள்ளச்சந்தையில் விற்பனை போன்றவை நடக்கிறதா? என்பதை ஆய்வுசெய்து அவற்றை தடுக்க உத்தரவிட்டுள்ளார். பருப்பு விலையையும் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. 
 
இந்தியாவில் விளைச்சல் குறைவாக இருப்பதால் விலை ஏற்றம் ஏற்பட்டிருக்கிறது. எனவே வெளிநாடுகளில் இருந்து இறக்குமதிசெய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. இந்த விலை உயர்வு அதிக நாட்கள் இருக்காது. மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆதரவாக செயல் பட்டு வருகிறது. 
 
ரூ.80 ஆயிரம் கோடியில் நீர்ப்பாசன திட்டம் உள்ளிட்ட நடவடிக் கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. தமிழக சட்ட சபையில் ஆரோக்கியமான விவாதம் நடைபெற வேண்டும். சிலை கடத்தல் விவகாரத்தில் அரசு விசாரணையை துரிதப் படுத்த வேண்டும். கோவில்களில் உள்ள சிலைகளின் தன்மை குறித்து ஆய்வுசெய்ய வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply