துவரம்பருப்பு உள்ளிட்ட பருப்பு வகைகளின் விலை அதிகரித்துவரும் சூழலில் கடந்த 2 நாட்களில் மட்டும் 36 ஆயிரம்டன் பருப்பு வகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

துவரம் பருப்புவிலை கிலோ 210-ஐ கடந்து விற்கப்படும் நிலையில் பதுக்கலுக்கு எதிராக மத்தியஅரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி கடந்த 2 நாட்களில் 10 மாநிலங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் 36 ஆயிரம்டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதிக பட்சமாக மகாராஷ்ட்ராவில் 23 ஆயிரத்து 340 டன்னும், சத்தீஷ்கரில் 4 ஆயிரத்து 525 டன் பருப்பு பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து 4 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

”பருப்புவகைகளை பதுக்கி வைத்திருப்பவர்கள் மீது மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வில்லை. கடந்த இரு தினங்களில் மட்டும் 3,290 திடீர்சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. திடீர் சோதனைகள் தொடரும் அதே சமயம் பதுக்கல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என மத்திய மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். 

Leave a Reply