பாஜகவுடனான கூட்டணியை விமர்சித்த ஐக்கிய ஜனதா தளக் கட்சி மூத்த தலைவர் பவன் வர்மாவை (Pavan K Varma) கட்சியிலிருந்து விலகி கொள்ளலாம் என்று அக்கட்சித் தலைவரும், பீகார் முதலமைச்சருமான நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஐக்கிய ஜனதாதளம் போட்டியிடுவது குறித்து பவன்வர்மா வெளிப்படையாக கேள்வியெழுப் பியிருந்தார். இதனால் பீகார் அரசியலில் பெரும்சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பாட்னாவில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நிதிஷ் குமார், கட்சிவிவகாரம் குறித்து பவன்வர்மா வெளிப்படையாக கருத்துகள் வெளியிட்டது ஆச்சரியம் அளிப்பதாகவும், அவர்விரும்பினால் ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து விலகி வேறு எந்தகட்சியில் வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளலாம், அதற்கு தமதுவாழ்த்துகள் என்றார்.

Comments are closed.