பாகிஸ்தான் தலைநகர்  இஸ்லாமாபாத்தில் வரும் நவம்பர் 9, 10 தேதிகளில்19-வது சார்க் மாநாடு நடைபெற இருந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட சார்க் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க திட்டமிட்டிருந்தனர்.

இந்நிலையில் காஷ்மீர் மாநிலம் உரி ராணுவமுகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதால் சார்க்மாநாட்டை இந்தியா புறக்கணித்தது. இதற்கு ஆதரவாக வங்கதேசம், பூடான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளும் மாநாட்டைபுறக்கணித்தன. சிலதினங்களில் சார்க் மாநாட்டை புறக்கணிப்பதாக இலங்கையும் அறிவித்தது. இந்தவிவகாரத்தில் பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டதையடுத்து சார்க்மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இந்தியா மேற்கொண்ட சர்ஜிகல் தாக்குதலுக்கு ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளும் வரவேற்புதெரிவித்தன.

இந்நிலையில், பாகிஸ்தானை தனிமைபடுத்தியது மோடி அரசின் சாதனை என்று மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மணிப்பூர் மாநிலத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “பயங்கரவாத்திற்கு தொடர்ந்து ஒத்துழைப்பு அளித்துவந்த பாகிஸ்தான் நாட்டை சர்வதேச அரங்கில் தனிப்படுத்தியது பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு செய்த மிகப் பெரிய சாதனை” என்று கூறினார்.

Leave a Reply