அணுஆயுத பயன்பாடு குறித்து ஐநா சபையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பொறுப்பற்று பேசியதையடுத்து, அந்த நாட்டை தனிமைப்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரமாக செயலாற்றிவரும் நிலையில், பிரதமர் மோடி, இதுகுறித்து சவுதி இளவரசருடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள அந்நாட்டிற்கு செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை இந்தியா திரும்பபெற்றதில் இருந்தே, இந்தியாவின் உள்நாட்டு விவகாரமான இதுகுறித்து பாகிஸ்தான் எல்லைமீறி கருத்துதெரிவித்து வருகிறது.. காஷ்மீர் பிரச்சனையில் தலையிடவேண்டாம் என பலமுறை இந்தியா எச்சரிக்கை விடுத்தும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், அதை பற்றி ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கிறார். மேலும், இவரது உரையாடலின் ஒருபகுதியாக, “அணு ஆயுதங்கள் கொண்ட இரண்டு நாடுகளுக்குமிடையே வழக்குகளும், சச்சரவுகளும் தொடரும் நிலையில், அது அணு ஆயுத போருக்கே வழிவகுக்கும்” என கூறியுள்ளார். இவரின் இந்தபேச்சை பல தலைவர்களும் வன்மையாக கண்டித்து கருத்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தானிற்கு பாடம்கற்பிக்கவும், அந்நாட்டை தனிமைப்படுத்தும் முயற்சியிலும் இந்தியா தீவிரமாக ஈடுபட்டுவரும் நிலையில், இது குறித்து சவுதிஇளவரசர் முஹமதுபின் சல்மானுடன், பிரதமர் பேச்சு வார்த்தை மேற்கொள்ள அந்நாட்டிற்கு செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் வகையில், இருதலைவர்களும் சிலமுக்கிய தீர்மானங்கள் எடுப்பர் என எதிர்பார்க்க படுகிறது.

இதனிடையில், கடந்த சிலநாட்களுக்கு முன்பு, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சவுதி இளவரசரை சந்தித்து இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களது உரையாடல், இந்தியா சவுதி இடையான உறவை மேம்படுத்தும் வகையிலும், கருப்புப்பட்டியலில் பாகிஸ்தானை சேர்க்க சவுதியின் ஆதரவை கோரும் வகையிலும் இருந்ததாக செய்திகள் தெரிவிக்கிறது.

Tags:

Comments are closed.