ஹரியானா, டெல்லியில் வசிக்கும் பாகிஸ்தான் அகதிகள் டெல்லி பாஜக தலைமைய கத்திற்குச் சென்று பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர்.
டெல்லியிலுள்ள பாஜக தலைமையகத்துக்கு பாகிஸ்தான் அகதிகள் நேற்றுசென்றனர். அங்கு அவர்கள் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, கட்சியின் தேசிய செயல்தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர். இந்த அகதிகள் டெல்லி, ஹரியானா ஆகிய பகுதிகளில் வசிக்கிறார்கள். குடியுரிமை திருத்தச்சட்டம் 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதிக்கு முன்னர், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிலில் மத துன்புறுத்தலுக் குள்ளாகி அகதிகளாக இந்தியா வந்தவர்களுக்கு எளிதில் குடியுரிமை கிடைக்க வழிவகைசெய்கிறது.
கடந்த டிசம்பர் மாதம் ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு அகதிகளாகவந்த சிறுபான்மையினரில் ஒருகுழுவுக்கு குடியுரிமை வழங்கப்பட்டது நினைவு கூரத்தக்கது.