பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவின் ஒருங் கிணைந்த பகுதி தான் என பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட்ஜான் பிளாக்மேன் தெரிவித்தார்.


 சட்ட விரோதமாக பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீர்பகுதியை இந்தியாவிடமே திருப்பி ஒப்படைக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.


 ஜம்முவில் செவ்வாய்க் கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இது குறித்து ராபர்ட்ஜான் பிளாக்மேன் கூறியதாவது:


 இந்தியாவின் பிரதமராக நரேந்திரமோடி பொறுப்பேற்றதில் இருந்தே, நாட்டை பொருளா தாரத்திலும், ராணுவத்திலும் வலிமை மிக்கதாக உருவாக்க முயன்றுவருகிறார். அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க பிரிட்டன் அரசு தயாராக உள்ளது. மோடி பிரதமரான பிறகு இந்தியா – பிரிட்டன் இடையேயான நல்லுறவு மேம்பட்டுவருகிறது. பாகிஸ்தான் மண்ணிலிருந்து ஏவப்படும் பயங்கரவாதத் தாக்குதல்களால் இந்தியா பாதிக்கப் பட்டுள்ளது.

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பயங்கர வாதத்தைப் பரப்பும் சக்திகளை வேரறுப்பது அவசியம். பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் இந்தியாவுடன் தோளோடுதோள் நின்று பிரிட்டன் ஒத்துழைக்கும். ஜம்முகாஷ்மீரை முன்னர் ஆண்ட அரசர், அந்த பகுதியை இந்தியாவின் கட்டுப் பாட்டின் கீழ் கொண்டுவந்தார். ஆனால் அந்தமாநிலத்தின் ஒரு பகுதியை பாகிஸ்தான் தற்போது சட்ட விரோதமாக ஆக்கிரமித்து வைத்துள்ளது.


 ஜம்முகாஷ்மீர் மாநிலம் முழுவதுமே இந்தியாவின் ஒருங் கிணைந்த பகுதிதான். எனவே, ஆக்கிரமித்து  வைத்துள்ள பகுதிகளை இந்தியாவிடமே பாகிஸ்தான் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்றார் அவர்

2 responses to “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவின் ஒருங் கிணைந்த பகுதி தான்”

  1. Mani.R says:

    It is a great success for our patience and approach towards Kashmir. It is the first country making a bold statement. Thanks to UK Government.We need not fight for the occupied Kashmir to reach us. Global voice would make the Pakistan to hand over the occupied Kashmir to our country India. Let us fight terrorism, and only terrorism which we are cable and strengthen further. Today’s Voice of UK within an year would become global voice on Pakistan occupied Kashmir.

  2. Unmai arinthor unarnthu sollum varthai uer ullathu. Ethai unarathavar manitha mirugam

    Valka nadu velka baratham

    Jagdeesan

    Hosur

Leave a Reply