பாகிஸ்தான் அரசு, ஜம்மூ காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்யப்பட்டது குறித்து தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து, சர்வதேசளவில் இந்திய மீது அழுத்தம் கொடுக்க முயன்று வருகிறது. இதற்கு பதிலடிகொடுக்கும் வகையில் இந்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், “பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவேண்டும். அதில் ஜம்மூ காஷ்மீர் குறித்து பேசப்படாது. மாறாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டும் தான் பேசப்படும்” என்று கூறியுள்ளார்.

ஹரியானாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராஜ்நாத் சிங் , “பாகிஸ்தான் அரசு, தீவிரவாதிகளுக்குப் புகலிடம் அளித்துவருவதை நிறுத்தினால்தான், பேச்சுவார்த்தை நடக்கும்.

முன்னதாக பாகிஸ்தான், சீனாவின் உதவியோடு ஐ.நா சபையில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பியது.

சட்டப்பிரிவு 370 குறித்து நடவடிக்கை எடுத்தால், அதுதேசத்தை இரண்டாக்கும் என்று பலர் கருதினார்கள். அதில் கைவைத்தால் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரவே வராது என்றும் கூறினார்கள். பாஜக-வுக்கு வாக்குவங்கி அரசியலைப் பற்றித் துளியும் கவலைஇல்லை. தேச ஒற்றுமையை முன்னிருத்தும் அரசியலைத்தான் நாங்கள் செய்வோம்” என்று உரையாற்றினார்.

அந்த ஆலோசனை கூட்டத்தில் பாகிஸ்தான் நினைத்ததுபோல் எதுவும் நடக்கவில்லை. கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பான்மை நாடுகள், ‘காஷ்மீர் விவகாரம்குறித்து பாகிஸ்தானும் இந்தியாவும் மட்டும் தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’ என்று தெரிவித்து விட்டன. எந்தவித தீர்மானமும் நிறைவேற்றப்படாமலேயே அந்த கூட்டம் முடிவடைந்தது. இது பாகிஸ்தானுக்கு மிகப்பெரும் பின்னடைவாக பார்க்கப் படுகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் மீது மேலும் அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில் ராணுவத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார்.

Comments are closed.