இந்தியா-பாகிஸ்தான் நல்லுறவு வலுபெற முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வழியில் மோடியும் செல்லவேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார்.


இந்திய பிரதமர் நரேந்திர மோடி  ஆப்கான் பயணத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து டெல்லி திரும்ப இருந்த நிலையில், திடீரென தனது பயணத் திட்டத்தை மாற்றி பாகிஸ்தானுக்குச் சென்று அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீபை சந்தித்தார். இந்த திடீர்பயணம் மற்றும் சந்திப்பினை அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் வரவேற் றுள்ளன. ஐ.நா. சபையும் வரவேற்றுள்ளது.
 

மோடியின் இந்த திடீர் பயணத்தினை பாஜக மூத்த தலைவர் அத்வானி வரவேற்று பாராட்டி யுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

பிரதமர் மோடியின் திடீர்  பயணம் வரவேற்கதக்கது. இந்தியா-பாகிஸ்தான் இடையே நல்லுறவை பேணும்வகையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் துவக்கி வைத்த முயற்சியை மோடி முன்னெடுத்து செல்லவேண்டும். வாஜ்பாய் வழியில் நாட்டை மோடியும் மற்றவர்களும் வழி நடத்திச்செல்ல வேண்டும் என்று அத்வானி கூறியுள்ளார். மோடியின் பாகிஸ்தான் பயணத்தை வரவேற்றுள்ள மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், இதுபோன்ற முயற்சிகள், அண்டை நாடுகளுடன் இந்தியா நல்லுறவை மேம்படுத்த விரும்புவது தொடர்பான நம்பிக் கையான செய்தியை அளிப்பதாக தெரிவித்துள்ளார். ஒரு புறம் மோடியின் திடீர் பாகிஸ்தான் பயணம் ஆக்கப்பூர்வமாக இருந்தாலும், எதிர்கட்சியினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

Leave a Reply