இந்தியாவில் பயங்கரவாத செயல் காரணமான பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 11 பேர் கொண்ட புதியபட்டியலை, ஐ.நா.விடம் இந்தியா அளித்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.


 இதுதொடர்பாக, மக்களவையில் புதன் கிழமை கேள்வியொன்றுக்கு பதிலளித்து அவர் கூறியதாவது: இந்தியாவில் பயங்கரவாத செயல்களுக்கு காரணமான பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கங்களை சேர்ந்த 11பேர் அடங்கிய புதியபட்டியலை, ஐ.நா. பயங்கரவாத தடுப்புக்குழுவிடம் இந்தியா கடந்த 16-ம் தேதி அளித்தது.

மேலும், இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதிகளை, வெளி நாடுகளில் இருந்து நாடு கடத்திக்கொண்டு வருவதற்காக 49 நாடுகளுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளன என்று சுஷ்மா தெரிவித்தார். ஐ.நா.விடம் இந்தியா அளித்துள்ள பட்டியலில் அல்-காய்தா, தலிபான், ஐஎஸ் சார்புபயங்கரவாத இயக்கங்களை சேர்ந்தோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும், அந்த பயங்கர வாதிகளின் பெயர் விவரங்களை அவை தெரிவிக்கவில்லை.

Leave a Reply