பாகிஸ்தானில் உள்ள சிந்துமாகாணம், ஹைதரா பாத்தை சேர்ந்தவர் மஷால் மகேஸ்வரி (19).பாகிஸ்தானில் இந்துக்களுக்கு போதியபாதுகாப்பு இல்லை என்று பயந்து, மஷால் மகேஸ்வரியும், அவரது பெற்றோர்களும், கடந்த இரண்டுஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூருக்கு குடிபெயர்ந்தனர்.
 
இந்நிலையில், இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு எழுதினார். அதில், மகேஷ்வரி 91 சதவீத மதிப் பெண்கள் பெற்றார். மேலும், தனது தந்தை, தாய்போலவே டாக்டராக வேண்டும் என விருப்பம் தெரிவித்தார்.
 
ஆனால், அவர் அகிலஇந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு எழுதுவதில் சட்டசிக்கல் ஏற்பட்டது. இதனால், இந்த விவகாரத்தில் தனக்கு உதவுமாறு பிரதமர் மோடிக்கு கோரிக்கைமனு அனுப்பினார். இந்தமனு மீது நடவடிக்கை எடுக்க பிரமதர் மோடி, சுஷ்மாஸ்வராஜ்க்கு உத்தரவிட்டார்.
 
இதனையடுத்து, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது டுவிட்டர் மூலம் அந்த மாணவியை தொடர்புகொண்டார். மேலும், கர்நாடகாவில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கிக்கொடுத்துள்ளார்.

Leave a Reply