பாகிஸ்தான் மீது அவநம்பிக்கை கொள்ள எந்த ஒருகாரணமும் இல்லை என உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறும்போது, "பதான்கோட் தாக்குதல் குறித்து நடவடிக்கை எடுப்பதாக பாகிஸ்தான் ஏற்கெனவே கூறியுள்ளது. இந்தவிஷயத்தில் நாம் பொறுமை காக்கவேண்டும் என்று நினைக்கிறேன். இவ்வளவு சீக்கிரம் பாகிஸ்தான் மீது அவநம்பிக்கை கொள்ள நமக்கு எந்தகாரணமும் இல்லை" .

பதான்கோட் தீவிரவாத சம்பவத்தில் உறுதியான நடவடிக்கையை பாகிஸ்தான் எடுக்கவேண்டும் என்றும் தாக்குதல் தொடர்பில் தீவிரவாதிகள் பயன்படுத்திய தொடர்பு எண்களையும் பாகிஸ்தானுக்கு இந்தியா வழங்கியது. இதன் அடிப்படையில் இருநாட்டு உயர்மட்ட அதிகாரிகளின் பேச்சுவார்த்தையும் தள்ளிப்போயுள்ளது.

பாகிஸ்தான் தீவிரப்படுத்திய, 15 ம் தேதி நடைபெறவிருந்த இந்தியா – பாகிஸ்தான் இடையேயான வெளியுறவுத் துறை செயலர்கள் மட்டத்திலான பேச்சு வார்த்தைக்கு இந்தியா முட்டுக்கட்டைபோட்ட நிலையில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பதான்கோட் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு பாகிஸ்தானுடனான தொடர்பு குறித்து விசாரணை நடத்த உயர்மட்ட கூட்டுவிசாரணை குழு அமைத்து உத்தரவிட்டார்.

இதனையடுத்து பாகிஸ்தான் உளவு அமைப்புகள், பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ராணுவம் ஆகியவை இணைந்து நடத்திய தீவிர தேடுதல்வேட்டையில் பலர் கைது செய்யப் பட்டதாக அந்நாட்டு உளவுத்துறை தகவல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply