இந்திய ராணுவவீரர் ஒருவரை தீவிரவாதிகள் துண்டுதுண்டாக வெட்டி வீசிய சம்பவத்திற்கு பதிலடிதரும் வகையில் பாகிஸ்தான் ராணுவத்தின் 4 நிலைகளை தகர்த்துள்ளனர் இந்தியவீரர்கள். கெரன் செக்டார் பகுதியிலுள்ள 4 நிலைகளை ராணுவ வீரர்கள் தகர்த்து ள்ளனர். மொத்தம் 7 நிலைகள் உள்ள நிலையில், மற்ற மூன்றையும் விரைவில் தகர்ப்போம் என்று சூளுரைத்துள்ளனர்.
 
இந்நிலைகளில் இருந்தபடி தான், இந்திய எல்லை, இந்தியதுருப்புகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்துவதுவழக்கம். அந்த சூழ்நிலையை பயன்படுத்தி தீவிரவாதிகள் இந்தியஎல்லைக்குள் ஊடுருவார்கள். எனவே இந்த 7 நிலைகளையும் தகர்ப்பது இந்தியராணுவத்தின் இலக்காக இருந்தது.
 
எப்போதெல்லாம், பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிசூட்டை அதிகப்படுத்து கிறதோ, அப்போதெல்லாம், இந்தியாவிற்குள் தீவிரவாதிகளை ஊடுருவ செய்ய பாகிஸ்தான் முயலுவதையே அது எடுத்துக் காட்டுகிறது. இருப்பினும், சக இந்தியவீரர் ஒருவர் கொல்லப்பட்டதால், உடனடியாக பாகிஸ்தான் நிலைகளை தகர்த்துள்ளனர். ராக்கெட் லாஞ்சர்கள் இத்தாக்குதலுக்கு பயன்படுத்தப் பட்டுள்ளன. இனிமேல் தீவிரவாதிகளின் ஊடுருவல் குறைக்கப் படும் என ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன.

Leave a Reply