பாக்கெட்களில் விற்கப்படும் உணவுப்பொருட்களில், போலிகளை தடுக்க, 'பார்கோடு' எனப்படும் குறியீட்டு எண்ணை கட்டாயமாக்க, மத்தியஅரசு திட்டமிட்டுள்ளது.

பாக்கெட் உணவு பொருட்களில் போலிகளை தடுக்கவும், மற்றநாடுகளில் இருந்து தரம்குறைந்த உணவுப் பொருட்கள் சந்தையில் விற்பதை தடுக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, பாக்கெட் உணவுப்பொருட்கள் சட்டத்தில் திருத்தம்செய்வது குறித்து, மத்திய நுகர்வோர் நல அமைச்சகம் ஆய்வுசெய்து வருகிறது.

 

உணவுப்பொருட்கள் குறித்து, பாக்கெட்களில் அச்சடிக்கப்படும் விபரங்கள் மிகவும் சிறியதாக இருப்பதால், படிக்க முடிவதில்லை; படிப்பதற்கு ஏற்றவகையில், சற்று பெரிய எழுத்துக்களில் அச்சடிப்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. இதைத்தவிர, போலிகளை தவிர்க்க, அனைத்துவகை பாக்கெட் உணவுப் பொருட்களுக்கும், 'பார்கோடு' முறையை கட்டாயமாக்குவது குறித்தும் ஆய்வு செய்யப் படுகிறது.

 

அரிசி, கோதுமை போன்ற உணவு பொருட்களை, அதிகபட்சம், 25 கிலோ வரையிலான பைகளில்தான் விற்கமுடியும்; இதை, 50 கிலோவாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இவற்றின் விலை குறையும் வாய்ப்புள்ளதாக, நுகர்வோர் நலத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply