பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கர வாதிகளுக்கு எதிராகவும், பயங்கரவாத முகாம்களுக்கு எதிராகவும் அப்பகுதிமக்கள் போராட்டம் நடத்த துவங்கி உள்ளனர்.


பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், அந்நாட்டு ராணுவமும், அரசும் மனிதஉரிமை மீறலில் ஈடுபட்டு வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. இதனை எதிர்த்து அப்பகுதிமக்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்புகூட, பாகிஸ்தானின் அத்துமீறலை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், இன்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்களை அப்புறப் படுத்த வேண்டும் என பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். முசாபாராபாத், கோட்லி, சினாரி, கில்ஜித், டயமர் மற்றும் நீலும் பள்ளத்தாக்கு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தபகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள், தங்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கிறது. பயங்கரவாத முகாம்களை அழிக்க அரசும் ராணுவமும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். பயங்கரவாதிகளால் நாங்கள் நரகத்தில் வாழ்வதுபோல் உள்ளது. பயங்கரவாதிகளை முற்றிலும் அழிக்காத வரையிலும், பயங்கரவாத முகாம்களை முற்றிலும் அகற்றாதவரையிலும், அவர்களுக்கு புகலிடம்தராத வரையிலும், எங்களின் பிரச்னை தீராது எனக் கூறினார். டயமர், கில்ஜித், பாசின் பகுதிகளில் பயங்கரவாத முகாம்களை அகற்றவில்லை என்றால் நாங்களே அகற்ற வேண்டிய நிலை ஏறபடும் எனவும் கூறினர்.

மக்களின் போராட்டம், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சர்ஜிக்கல் தாக்குதலே நடக்கவில்லை என பொய்க் கூறும் பாகிஸ்தானின் நிலையை மேலும் பலவீனமாக்கியுள்ளது.

Leave a Reply