காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ ரத்துசெய்திருப்பது பாசிசக்
கயமை என்றும்,பாசிச மோடி அரசைக்கண்டித்தும் திமுக டெல்லியில் ஆகஸ்ட் 22 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தும் என்றும் அறிவித்திருந்தார் ஸ்டாலின்.

திட்டமிட்டபடி நேற்று டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . ஆனால்
ஸ்டாலின் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவில்லை; டெல்லி செல்லவும் இல்லை.

திமுகவின் டெல்லி முகமாகவும் திமுக குடும்ப வாரிசாகவும் உள்ள கனிமொழி எம்பி யும் கலந்துகொள்ளவில்லை.திமுகவில் மூன்று முக்கியப்பதவிகளில் உள்ள (தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர்)யாரும் கலந்து கொள்ளவில்லை.

பேராசிாியா் அன்பழகன் கலந்து கொள்ளாததற்கு காரணம் இருக்கிறது. வயது மூப்பின்
காரணமாக இயலாமை.நன்கு ஆங்கிலம் அறிந்த பொருளாளர் துரைமுருகனும் பங்கேற்கவில்லை. இவையெல்லாம் அரசியல்நோக்கர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

வைகோவும் மருத்துவ சிகிச்சை என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கவில்லை.

திருமாவளவனும் பங்கேற்கவில்லை. அவருக்கு அதிமுக்கியமான வேலை ஒன்று இருந்தகாரணத்தால் அவர் டெல்லி செல்லவில்லை என்று கதைவிடப்பட்டது.

அடுத்து, ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் முற்றிலுமாக மாற்றப்பட்டு விட்டது.பிாிவு 370ஐ நீக்கிய பாசிசப்
போக்கைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் என்பது கைவிடப்பட்டுவிட்டது.அதற்குப் பதிலாக காஷ்மீரில் கைது செய்யப்பட்ட, வீட்டுக்காவலில் இருக்கிற உமர் அப்துல்லா போன்ற தலைவர்களை
விடுதலை செய்யக்கோரும் ஆர்ப்பாட்டம் என்பதாக ஆர்ப்பாட்டத்தின் நோக்கமும்
உள்ளடக்கமும் மாற்றப்பட்டன.

ஏன் இந்த மாற்றம்? மோடியின் பாசிசப் போக்கை (!) கண்டிப்பதில் என்னதயக்கம்? பிாிவு 370ஐ நீக்கியது காஷ்மீர் மாநிலத்தின் உரிமையைக் கசக்கி எறியும் பாசிசக்கொடுஞ்செயல்
என்று கண்டனத்தை முழங்க திமுகவுக்கு ஏன் தயக்கம்?

பிாிவு 370 ஐ எதிர்க்க முடியாது என்றும், அப்படி எதிர்த்தால், NIA புதிய திருத்தச் சட்டப்படி, கைது,
சிறைவாசம் மட்டுமல்ல; கட்சியின் அங்கீகாரமும்பறிபோகும் என்றும் கட்சி
வழக்கறிஞர்கள் ஸ்டாலினுக்குச்எடுத்துச் சொன்னார்களாம்.

பயந்துபோன ஸ்டாலின் அடுத்த நிமிடமே ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கையையே அடியோடு மாற்றி விட்டாராம்.தானும் டெல்லிசெல்லாமல் இருக்கவும் முடிவெடுத்து விட்டாராம்.
இதுதான் உண்மை!

பாசிச மோடி பாயாச மோடியாக மாறியது இப்படித்தான்! ஒரு திரைப்படத்தில்
நம்ம வடிவேலு கேட்பார் :

“இன்னுமாடா இந்த ஊரு நம்மளை நம்புது?”

Comments are closed.